ஆளும் கட்சி முரண்பாட்டை தீவிரப்படுத்த முடியாது; விரைவில் பிரதமருடன் பேச்சு - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 3

24 Apr, 2021 | 09:15 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்  பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஒரு சில அடிப்படை பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பது அவசியமாகும். ஆளும் தரப்பிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாட்டை  தீவிரப்படுத்த முடியாது என லங்கா சமசமாஜ  கட்சியின் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளும் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கும், கருத்து வேறுப்பாடுகளுக்கும் தீர்வு காணும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 19 ஆம் திகதி கட்சி தலைவர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கட்சிதலைவர் கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மாத்திரம் பங்குப்பற்றுவது வழமை ஆனால் அன்று வழமைக்கு மாறாக பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டார்கள்.

கூட்டணியின் உள்ளக பிரச்சினைகளுக்கு  பிரமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அன்று அதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. இதனால்  பெரும்பாலான பங்காளி கட்சிகள் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.

பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க அனுமதி கோரியுள்ளோம். எதிர்வரும் வாரம்  இருதரப்பு பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் கருத்து வேறுப்பாடுகள் ஆகியவற்றுக்கு துரிதமாக தீர்வு காண்பது அவசியமாகும். என்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 19 ஆம் திகதி இடம் பெற்ற பேச்சுவார்த்தையில்  பிரதான பங்காளி கட்சியின் உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. 

அன்று இடம் பெற்ற கூட்டத்தில் அமைச்சர்களான ஜி.எல் பீறிஷ், தினேஷ் குணவர்தன ஆகியோரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06