அடுத்த 3 வாரங்கள் அவதானமிக்கவை : 900 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் !

24 Apr, 2021 | 06:28 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மிக்கிறது. 

கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்று வரை குருணாகல் மாவட்டத்தில் மூன்று பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் தீர்க்கமானவை என்றும் , இதன் போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவர் என்றும் சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.

நேற்று 900 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்

நேற்று வெள்ளிக்கிழமை 931 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 99, 653 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 94 036 பேர் குணமடைந்துள்ளதோடு , 4848 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது.

குருணாகலில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்

குருணாகல் மாவட்டத்தில் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு , வெல்லவ பொலிஸ் பிரிவின் நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியவை நேற்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன.

கைதிகளை பார்வையிட முடியாது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திக் கொண்டு இன்று சனிக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கனேவத்தையில் புகையிரதம் நிறுத்தப்படாது 

குருநாகல் - கனேவத்த புகையிரத நிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேவத்த புகையிரத நிலையத்தை அண்மித்துள்ள 05 கிராமங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கமைய மறு அறிவித்தல் வரை கனேவத்த புகையிரத நிலையம் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்தளையில் மணப்பெண்ணுக்கு தொற்றுறுதி

வத்தளை பகுதியில் அண்மையில் திருமணம் நடந்த மணப்பெண் ஒருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்லேகல மைதான ஊழியருக்கு தொற்று

கண்டி - பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17