நாடு தற்போது அபாய நிலையில் : அரசாங்கம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Digital Desk 4

23 Apr, 2021 | 08:07 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என சட்ட விதிமுறைகள் இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Articles Tagged Under: கெஹலிய ரம்புக்வெல்ல | Virakesari.lk

கொவிட் பரவல் தொடர்பான இன்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களும் அரசாங்கம் , சுகாதார அமைச்சு ஏனைய சுகாதார தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் எத்தகைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும்.

ஜேர்மன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கூட தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

எமது அயல் நாடாள இந்தியாவிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்டதை விட தற்போது உருமாறிய வைரஸ் பரவலே இதற்கான காரணமாகும். இது எமக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

எனவே இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் தமது கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

எனவே இம்முறை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடு என்பவற்றை விதித்து சட்டத்தின் மூலமாக அன்றி , முழுமையாக மக்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41