இலங்கையில் “தூய்மையான நகரங்கள், நீலப் பெருங்கடல் திட்டத்தை ” ஆரம்பித்தது அமெரிக்கா

Published By: Digital Desk 2

23 Apr, 2021 | 07:55 PM
image

அமெரிக்க அரசாங்கத்தின் தூய்மையான நகரங்கள், நீல பெருங்கடல் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடக வழங்கப்படும் முதலாவது அன்பளிப்பு உதவித்தொகை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் நேற்று  அறிவித்தார்.

இதன்  மொத்த  பெறுமதி 345,000 அமெரிக்க டொலராகும். இலங்கை அமைப்புகளுக்கான இந்த அன்பளிப்பானது,  பிளாஸ்டிக் மாசுக்களில் இருந்து இலங்கையின் நகரங்கள் மற்றும் கடல் வளங்களை  பாதுகாக்க  உதவும் திட்டங்களுக்கு நிதியளிப்பை மேற்கொள்ளும். சுற்றாடல் துறை அமைச்சின்  செயலாளர்  டாக்டர். அனில் ஜாசிங்க, தூதுவர் டெப்லிட்ஸுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  


“மாசடைவு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின்  தாக்கத்தை  மாற்றியமைப்பதற்கு தேசிய மற்றும் உள்ளூர்  ஒருங்கிணைப்பு, நீடித்த  பங்காண்மைகள், சமூக ஈடுபாடு, மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட  தீர்வுகள் முக்கியமானவையாகும் ” என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

“தூய்மையான நகரங்கள், நீல  பெருங்கடல் நிகழ்ச்சித் திட்டமானது அடிப்படைக்  கொள்கைகளை கூட்டிணைப்பதுடன்,  எம்மை  சுற்றியுள்ள விலைமதிப்பற்ற சமுத்திரத்தை பாதுகாப்பதற்கு நிலையான தீர்வுகளை  உருவாக்குவதற்கு  இலங்கையர்களுக்கு  உதவும் ” என்றும் அவர் குறிப்பிட்டார். 


 

இலங்கை அரசாங்கத்திற்கும்  மற்றும் அடிமட்ட முயற்சிகளுக்கும்  ஏற்ப  சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க  முகவரமைப்பின் (USAID) தூய்மையான நகரங்கள், நீல பெருங்கடல்  நிகழ்ச்சித் திட்டமானது சமுத்திரத்துக்கு பிளாஸ்டிக் மாசுக்கள் பெருமளவில் சென்றடவதை குறைப்பதற்கான முன்னோடித்  திட்டங்களுக்கு நிதியளிக்கும். 

திண்மக்கழிவு முகாமைத்துவத்தை  மேம்படுத்துவதற்கும்  குறைத்தல், மீள்பயன்பாடு, மற்றும் மீள்சுழற்சி  நடைமுறைகளை  ஊக்குவிப்பதற்கான புதிய மாதிரி வடிவங்களை உருவாக்கவும், பரிசோதித்துப் பார்க்கவும் மற்றும்   அமுல்படுத்தவும் இலங்கை வர்த்த சம்மேளனம் மற்றும் பொதுநலன் சட்ட அறக்கட்டளை (Public Interest Law Foundation) என்பன நிதியளிப்பை பெற்றுக்கொண்டன.

சமுத்திரத்திலான பிளாஸ்டிக்  மாசுக்களின் எதிர்மறை தாக்கம் தொடர்பிலும் இந்த அன்பளிப்பு உதவித்தொகை பெறுவோர்  விழிப்புணர்வை உருவாக்குவார்கள்.  



கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பணியாற்றுவதில், உதவித்தொகையை  பெறுவோர் திண்மக்கழிவுகளை மேலும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்துகொள்வதற்கு  உள்ளூர் மற்றும்  தேசிய அரசாங்க நிறுவனங்களுடன் கூட்டிணைந்து செயற்படுவார்கள்.

தமது  பிளாஸ்டிக்  தயாரிப்புகளது உற்பத்தி  மற்றும் அகற்றுத்தலின்  சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு  உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் அரச – தனியார் பங்காண்மை அணுகுமுறையொன்றை இலங்கை வர்த்தக  சம்மேளனம் முன்னோடியாக மேற்கொள்ளும்.  

வைத்தியசாலைகளில் இருந்தான அபாயகரமற்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான  வழிகாட்டுதல்களை உருவாக்கவும், உள்ளூர் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை  பலப்படுத்துவதற்கான மும்மொழிவுகளை தயாரிப்பதற்கும், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின்  மீள்சுழற்சி மற்றும்  அகற்றலுக்கு  உதவும்  மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கும்  பொதுநலன் சட்ட  அறக்கட்டளை உதவும்.

தூய்மையான நகரங்கள், நீல பெருங்கடல் நிகழ்ச்சித் திட்டமானது  தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்பதுடன், திண்மக்கழிவு முகாமைத்துவம்  மற்றும்   அமுலாக்கத்திலுள்ள குறிப்பிடத்தக்க சவால்கள் மற்றும் தனியார்துறை முதலீட்டுக்கான தடைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு தள மட்டத்திலான ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.  

தூய்மையான நகரங்கள், நீல பெருங்கடல் நிகழ்ச்சித் திட்டமானது சமுத்திர பிளாஸ்டிக்  மாசுபாடு  தொடர்பான உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான அமெரிக்க அரசாங்கத்தின்  முதன்மை  திட்டமாகும்.

இது தற்சார்பு நிலைக்கு உதவுவதற்கும்  பொருளாதார வளர்ச்சியை  ஊக்குவிப்பதற்குமான  அமெரிக்க மற்றும்  இலங்கை  மக்களுக்கு  இடையிலான நீண்டகால  பங்காண்மையின் அங்கமொன்றாகும். 1961 ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 350 மில்லியன்   இலங்கை ரூபாவுக்கும்  அதிகமான தொகையை (2 பில்லியன்  அமெரிக்க டொலர்) கொண்ட  இலங்கையிலான USAID  இன்  நிகழ்ச்சித்  திட்டமானது, ஆரோக்கியமான, கல்வியறிவுடைய, மற்றும்   தொழில்வாய்ப்புடைய சனத்தொகையொன்றை ஊக்குவிக்கிறது.











முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08