தேசிய மட்டத்தில் கல்விக்குழுவை அமைக்க வேண்டும் -  யாழ் ஆயர்

Published By: Digital Desk 2

23 Apr, 2021 | 07:53 PM
image


எம்.நியூட்டன்


இலங்கையின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமாயின்  தேசிய மட்டத்தில் கல்விக்குழு அமைத்து அந்த குழுவே கல்விக்கான திட்டமிடல்களைக் செய்ய வேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இக்கோரிக்கையை நான்  மத்திய கல்வி அமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.


  

இளவாலை கன்னியர் மட மாகாவித்தியால 125 ஆவது ஆண்டு யூபிலி விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய கல்வி நிலையைப் பார்த்தால் பரீட்சையை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது. தரம் 5 புலமைப்பரிசில்காக பிள்ளைகளை நான்கு மணிக்கே கல்வி நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றார்கள்.

இதனால் பிள்ளைகளை அலைக்கழிக்க வைப்பதுடன் அவர்கள் தலையை வீங்கச் செய்யும் வேலையைத்தான் செய்து வருகின்றது. இந்த புலமைப்பரீட்சையை  நிறுத்த வேண்டும் என்பதை தான்  நீண்டகாலமாகே கோரி வருகின்றேன்.

கல்வியை சிறந்த முறையில் கொண்டு செல்வதாயின் தேசிய மட்டத்தில் கல்விக் குழு ஒன்றை உருவாக்கி அந்த குழுவே எத்தகைய கல்வி முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை திட்டமிடவேண்டும்.

தற்போதுள்ள இலங்கையின் நிலையை அவதானிக்கும் போது புதிய அரசாங்கம் வருகின்றபோது ஒரு கொள்கையையும் மற்றொரு அரசாங்கம் வருகின்றபோது இந்தக் கொள்கையை மாற்றி வெறொரு கொள்கையை உருவாக்குகின்றது. 

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றால் போல் செய்வது சிறந்த கல்விக் கட்டமைப்பை உருவாக்காது. தற்போதைய நிலையை அவதானிக்கும்போதும் ஏ.எல் படித்தவர்கள் ஏ.எல் சித்தியடையாதவர்கள் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கின்றபோது எவ்வாறு நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.



கத்தேலிக்க பாடசாலைகளின் நோக்கம் பரீட்சைகளில் முன்னிற்கவேண்டும் என்பது அல்ல மாறாக நல்ல மனிதர்களை உருவாக்குவதே கத்தேலிக்க கல்வியின் நோக்கம் இதற்காகத்தான் கத்தேலிக்க பாடசாலைகளுக்கு அருகாமையில் கத்தேலிக்க ஆலயங்கள் காணப்படுகின்றன.

அதற்கான நோக்கம் சிறந்த மனிதர்களை உருவாக்கவேண்டும் என்பதே சிறந்த சித்தியடைதலைக் காட்டவேண்டுமாயின் புலமைப்பரிசில் பரீட்சையிலே அல்லது சதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் போன்றவற்றில்  சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களை தெரிவு செய்து எமது பாடசாலையில்இணைக்கமுடியும்.

நாங்கள் அவ்வாறு செய்வதில்லை கல்வியில் சித்தியடையாதவர்களையும் வறுமை நிலையிலுள்ளவர்களையும் அடையாளம் கண்டு இணைப்பதுடன் பாடசாலைக்கு அருகிலுள்ளவர்களையும் இனங் கண்டு அவர்களை இணைக்கின்றோம். ஒரு மாணவன் பாடசாலையை விட்டுச் செல்லும் போது எத்தகைய நிலையில் வெளியேறுகின்றான் என்பதில் தான் கல்வியின் தரம் தங்கியுள்ளது.



மனிதனை முழுமையடையச் செய்வது புத்தக அறிவு மட்டுல்ல கல்விச் செயற்பாட்டுடன் இணைந்த இணை பாடவிதான செயற்பாடுகளுடன்  சேர்ந்தே அவனைப் பூரணப்படுத்துகின்றது. கலை, பண்பாடு போன்றவற்றை இணைத்தே முழுமையடைய வேண்டும்.

இதற்காகத்தான் கல்வித் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் எனவும் தேசிய மட்டத்தில் கல்விக்குழு ஒன்றை அமைத்து அவர்களே அதனைத் திட்டமிடவேண்டும் என்றும் கல்வி அமைச்சர்  ஜி எல்.பீரிசுடன் கலந்துரையாடியுள்ளேன்.



மேலும் இளவாலை கன்னியர்மட மகாவித்தியாலம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்தினை திறம்பட செயலாற்றி வருகின்றது. தொடர்ந்து அந்த நோக்கத்திற்காக செயற்படவேண்டும் என்றார்.










  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56