சுந்தர் சி யின் 'அரண்மனை 3' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published By: Digital Desk 2

23 Apr, 2021 | 11:51 AM
image

இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் ஆர்யாவும், நடிகை ராசி கண்ணா தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

பேய், ஆவி போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு தமிழ் திரையுலகில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு ரசிகர்கள் பாரிய அளவில் ஆதரவளிப்பதும் தெரிந்த விடயம். 'காஞ்சனா' மற்றும் 'அரண்மனை' ஆகிய படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி தயாரித்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'அரண்மனை 3'. இந்தப்படத்தில் ஆர்யா, சுந்தர் சி, மறைந்த கொமடி நடிகர் விவேக், மனோபாலா,, யோகி பாபு, சம்பத், வின்சென்ட் அசோகன், நடிகைகள் ஆண்ட்ரியா, ராசிகன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சி சத்யா இசை அமைத்திருக்கிறார்.

ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான அரண்மனை ஒன்றின் பின்னணியில் அமானுஷ்ய சக்திகள் மற்றும் ஆவி தொடர்பான விடயங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திகில் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா மொத்வானி பேயாக நடித்திருந்தார். அரண்மனை படத்தின் இரண்டாவது பாகத்தில் த்ரிஷா பேயாக நடித்திருந்தார். அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா பேயாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்த கொமடி நடிகர் விவேக் இடம்பெற்றிருப்பதால் இது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35