ஒரே நாளில் 600 இற்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் : தொற்றாளர்களால் நிரம்பியுள்ள வைத்தியசாலை - மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு !

23 Apr, 2021 | 06:49 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்று பரவல் கடந்த ஒரு வாரத்தில் தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது. 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் அலை அலை இவ்வாண்டு பெப்ரவரி மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தமிழ் - சிங்கள புத்தாண்டையடுத்து மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் நேற்று வியாழக்கிழமை 600 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

இதேவேளை தேசிய தொற்று நோயியல் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் அதிகளவான தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , தீவிர சிகிச்சை பிரிவு முழுவதும் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஐ.டி.எச். வைத்தியசாலையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்

இவ்வாறான நிலையில் , நாட்டில் தற்போது மீண்டும் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அநாவசிய பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.  

நாளை மற்றும் நாளை மறுதினம் வார இறுதி நாட்கள் என்பதால் சுற்றுலாப்பிரயாணங்கள் உள்ளிட்டவற்றுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் நிலைமையை கருத்திற் கொண்டு அவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத்தளபதி கோரியுள்ளார்.

  குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு முடக்கம்  

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளில் நூற்றுக்கு 10 சதவீதமானோருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்படுவதாக குளியாப்பிட்டிய சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார். 

குளியாப்பிட்டி பிரதேசத்தில் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வைத்தியர் உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்று மாலை 6 மணிக்கு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. 

மறு அறிவித்தல் வரை இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்பதோடு , அங்கிருந்து யாரும் வெளியேறவோ வெளிப்பகுதிகளிலிருந்து இங்கு உள்நுழையவோ முடியாது என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இங்கு புதனன்று 59 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருணாகலில் அதிக தொற்றாளர்கள்

நேற்று முன்தினம் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் அதிகளவானோர் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். 

இம்மாவட்டத்தில் மாத்திரம் 171 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளனர். குருணாகல் - கனேவத்த பிரதேசத்தில் 100 தொற்றாளர்களும் , குளியாப்பிட்டியில் 59 தொற்றாளர்களும் ஏனையோர் குருணாகல் , கிரியுல்ல மற்றும் மாஹோ ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு தொற்று

திவுலப்பிட்டி பிரதேசத்தில் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 82 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

அஸ்ஸன்னவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று மெல்லவகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் உல்லாசப்பிரயாணம் சென்ற சிலருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுறுதியான வங்கி ஊழியர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு

கடந்த வாரம் கொழும்பு மற்றும் ஏனைய சில பிரதேசங்களில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட வங்கி ஊழியர்களின் மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களின் உடலில் காணப்படுவது தற்போதுள்ள வைரஸா அல்லது மாற்றமடைந்துள்ள வைரஸா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றும் 600 க்கும் அதிக தொற்றாளர்கள்

நேற்று வியாழக்கிழமை 657 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 98 707 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 93 884 பேர் குணமடைந்துள்ளதோடு , 4056 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை நேற்று மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து மரணங்களின் மொத்த 634 ஆக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11