இலங்கையின் முதல் தர பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்கள் உற்பத்தி நிறுவனமான,களனி கேபிள்ஸ் ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக தனதாக்கியுள்ளது.

ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் ஏழாவது தடவையாக சிங்கப்பூர் பான் பசுபிக் ஹோட்டலில் நடைபெற்றது.

வருடாந்தம் இடம்பெறும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை Employer Brands Institute மற்றும் CHRD Asia உடன் இணைந்து World HRD Congress கொள்கை பங்காளராக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் என்பது வியாபாரத்துக்கான ஆசிய சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த விருது அதிகளவு கௌரவிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன் ஆசியாவின் பொருளாதாரத்தை உறுதியடையச் செய்யும் நிறுவனங்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆசியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணர்கள் இந்த விருதுக்கான வெற்றியாளர்களை தெரிவு செய்வதில் நடுநிலை வகிப்பதுடன் இந்த தெரிவின் போது கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான தகைமையை பெற்றுக் கொள்வது என்பது இரு கட்டமாக அமைந்துள்ளன. ஆசிய நாடொன்றைச் சேர்ந்த நிறுவனம் இந்த விருதுக்காக தனித்து விண்ணப்பிக்க முடியும் அல்லது சுயாதீனமான நடுவர்கள் குறித்த நிறுவனத்தின் அறிமுக ஆவணத்தை மீளாய்வு செய்து விருதை வழங்குவதற்காக பரிந்துரைக்கலாம்.

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டின் வெற்றியாளராக களனி கேபிள்ஸ் தெரிவு செய்யப்பட்டமை சுயாதீன நடுவர்கள் நிறுவனத்தின் அறிமுக ஆவணத்தை மீளாய்வு செய்து விருதுக்காக பரிந்துரை செய்திருந்ததன் மூலமாகும். குளனி கேபிள்ஸ் பிஎல்சி பற்றி அவர்கள் பக்கச்சார்பற்ற முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததுடன் 2016 ஆம் ஆண்டுக்குரிய வெற்றியாளராகவும் தெரிவு செய்திருந்தனர்.

வெற்றியாளர் தெரிவின் போது, புத்தாக்கத்துக்கு ஊக்குவிக்கும் கம்பனியின் கலாசாரம், மனித வளங்கள் கொள்கைகளை பேணுவதுடன், நிறுவனசார் சுகாதார மற்றும் பெறுமதிகளில் தொடர்ச்சியான மேம்பாடு, சமூக தொழில் வழங்குநர் மற்றும் எதிர்கால தலைவர்களை ஊக்குவிப்பதற்கான திறன் போன்றன கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. 

ஒவ்வொரு நிறுவனங்கள் தொடர்பான பிரதான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமம் 2016 விருதை 300க்கும் அதிகமான சிரேஷ்ட நபர்கள் முன்னிலையில் 150 க்கும் அதிகமான ஆசிய நிறுவனங்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார். களனி கேபிள்ஸ் பிஎல்சியின் மனித வளங்கள் முகாமையாளர் கிஹான் விதானகமகே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

“What Great Employer Brands Really Do” எனும் தலைப்பில் இடம்பெற்ற குழுக்கலந்துரையாடலிலும் களனி கேபிள்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி உரையாற்றியிருந்தார். 

“484 employees, 484 hearts and one heart-beat”  எனும் தொனிப்பொருளில் அவர் சுருக்கமான உரையை நிகழ்த்தியிருந்தார். நிறுவனத்தின் மனித வளங்கள் கொள்கையை பிரதானமாக ஆராயும் வகையில் இது அமைந்திருந்தது.

“களனி கேபிள்ஸ் தொடர்ச்சியாக இலங்கைச் சந்தையில் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களாக திகழ்கிறது. எமது மனித வளங்கள் கொள்கையும் இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே, ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் எனும் விருதை பெற்றுக் கொண்டமையானது எமது தயாரிப்புகளுக்கு மேலும் கீர்த்தி நாமத்தை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும். அத்துடன் எமது நிறுவனத்தின் மனித வளங்கள் கொள்கைக்கும் பெருமளவு வலிமை சேர்த்திடும். எமது வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரம் வாய்ந்த பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பை வழங்கும்” என களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால தெரிவித்தார்.

“இலங்கையில் நடைபெற்ற தேசிய மனித வளங்கள் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்விலும் களனி கேபிள்ஸ் பிஎல்சி கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இதன் மூலம் எமது ஊழியர்களுக்கு பணியாற்றுவதற்கு எமது நிறுவனம் சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 47 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில் இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபிள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதையும் தனதாக்கியிருந்தது.