ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான  பெட்மிட்டன் அரையிறுதி போட்டியில்  ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனையொருவர் பெட்மிட்டன் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான பெட்மிட்டன்  அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10 என்ற நேர்  செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் உலகின் முதல்தர பெட்மிட்டன் வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மெரினுடன் மோதவுள்ளார்.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 6.55 இற்கு இடம்பெறவுள்ளது.