தங்கச் சங்கிலி கொள்ளை: இருவார காலத்தில் 13 பேர் கைது - பிரதி பொலிஸ்மா அதிபரின் முக்கிய அறிவித்தல்

Published By: J.G.Stephan

21 Apr, 2021 | 05:17 PM
image

(செ.தேன்மொழி)
தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் கடந்த  இருவார காலப்பகுதியில் சந்தேக நபர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் தங்கச் சங்கிலி கொள்ளைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம் நான்கு கொள்ளைகள் பதிவாகியுள்ளன. யக்கல , வெல்லவ , வலஸ்முல்ல மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலேயே இந்த கொள்ளை பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் ஊடாகவே இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களின் போது பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களே இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் விபரங்களை கேட்டறிவது போன்றே தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டு வருகின்றனர். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் வினவினால், பெண்கள் பதிலளிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை , கடந்த இருவார காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58