ஹிந்திப் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத்

Published By: Gayathri

21 Apr, 2021 | 12:52 PM
image

தமிழ் திரை இசை உலகின் இளம் இசை அமைப்பாளரான அனிரூத், இந்தியில் தயாராகும் படத்திற்கு முதன் முறையாக இசை அமைக்கிறார்.

ஹிந்தி திரை உலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆனந்த் எல். ராய் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழ் திரையிசை உலகில் இளம் இசை அமைப்பாளரான அனிரூத் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இயக்குனர் ஆனந்த் எல். ராய், தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற படத்தை இயக்கியவர். தற்போது தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகிவரும் 'அற்றங்கி ரே' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

இசை அமைப்பாளர் அனிரூத் இதற்கு முன் இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'டேவிட்' படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 

இருப்பினும் ஹிந்தியில் தயாராகும் ஆனந்த் எல். ராய் படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகி இருப்பதால் அவரது நேரடியான ஹிந்தி அறிமுகம் இதுதான் என குறிப்பிடலாம்.

தற்போது இயக்குனர் ஆனந்த் எல். ராய் தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிப்பில் 'ரக்ஷா பந்தன்' என்ற ஒரு படத்தையும், சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். இதில் எந்தப் படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இதனிடையே இளம் இசை அமைப்பாளர் அனிரூத், தற்போது கமலஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'இந்தியன் 2' மற்றும் 'விக்ரம்' படத்திற்கும், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'D44' என்ற படத்திற்கும், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'தளபதி 65' படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37