இணையங்கள் மூலம் போலிச் செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Published By: Digital Desk 4

21 Apr, 2021 | 05:45 AM
image

(எம்.மனோசித்ரா)

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புதல் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் அவை சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

போலிச்செய்திகளை அடையாளம் காண்பது எப்படி ? | Virakesari.lk

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் போலியான செய்திகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குத் தேவையான சட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சமூக வலைத்தளங்களில் நூற்றுக்கு 17 சதவீதமானவையே இவ்வாறு போலி செய்திகளை வெளியிபவையாகக் காணப்படுகின்றன.

இவற்றின் காரணமாக நம்பகத்தன்மையான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறான போலி செய்திகளை பரப்பும் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கை மாத்திரமின்றி உலக நாடுகள் பலவும் அவதானம் செலுத்தியுள்ளன.

அவுஸ்திரேலியா போன்ற 5 நட்சத்திர ஜனநாயக நாடுகளும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புதல் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் குறித்த நிலைமைகள் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கமைய குறித்த பணிக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33