எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து இப்போது எதனையும் கூற முடியாது - அனுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Digital Desk 4

21 Apr, 2021 | 05:27 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார நிலைமையை வேறொரு திசைக்கு மாற்றும் முதல் அடித்தளமாகவே கொழும்பு துறைமுக திட்டம் அமைந்துள்ளதெனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக முக்கிய திட்டமெனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலகியமை அரசியல் நாடகம்' | Virakesari .lk

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகளும், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

 அவர் மேலும் கூறுகையில்,

கட்சிகள் இடையில் கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட நாட்டின் பொருளாதார கொள்கையில் நிலையான ஒரே கொள்கை கையாளப்பட வேண்டும்.

சீனா கொம்யுனிஸ்ட் நாடாக இருந்தாலும் அவர்களின் பொருளாதார கொள்கை முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையில் கையாளப்பட்டு வருகின்றது.

சுதந்திர வர்த்தக முறைமையை கொண்டு அவர்கள் வெற்றிகண்டு  வருகின்றனர். எனவே இலங்கையில் எந்த ஆட்சியாளர் எந்த கொள்கையில் இருந்தாலும் நிலையான பொருளாதார கொள்கையை கையாள வேண்டும்.

கொழும்பு துறைமுக நகர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது, ஆனால் நாட்டின் பொருளாதார நிலைமையை வேறொரு திசைக்கு மாற்றும் முதல் அடித்தளமாகவே இந்த திட்டம் அமைந்துள்ளது.

இதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்தே தற்போது சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், தொழில் பேட்டைகளை உருவாக்கவும் பொழுதுபோக்கு துறைகளை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான மிகச்சிறந்த திட்டமே துறைமுக நகர் மூலமாக உருவாகப்பட்டு வருகின்றது.

முன்னைய ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் துறைமுக நகர் குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக முக்கிய திட்டமாகும்.

சுதந்திர வர்த்தக கொள்கையே இன்றும் இலங்கையை பாதுகாத்து வருகின்றது, புதிய பொருளாதார கொள்கைக்கு அமையவே நாம் செயற்பட்டாக வேண்டும். அதிலேயே எமது அபிவிருத்தி தங்கியுள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் குமார் வெல்கம கூறுகையில்,

துறைமுக திட்டத்தை நாம் எதிர்கவில்லை ஆனால் அதற்காக உருவாக்கப்படும் சட்டத்தில் தான் பிரச்சினை உள்ளது, அதுமட்டுமல்ல கடலை நிரப்பி நகரை நிர்மாணிப்பதனால் இப்போது இல்லாவிட்டாலும் கூட இன்னும் நூறு ஆண்டுகளில் நாட்டிற்கு பாரிய விளைவுகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இதற்கு பதில் தெரிவித்த  அனுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி கூறுகையில்,

ஆணைக்குழு அதிகாரங்களை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து இப்போது எதனையும் கூற முடியாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41