ராகுல் காந்திக்கு கொரோனா

Published By: Digital Desk 3

20 Apr, 2021 | 04:50 PM
image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைலை வேகமாக பரவி வருகிறது. 

கொரோனா தொற்றுக்கு தற்போது அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது..

'லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் எம்முடன் தொடர்பில் இருந்த நபர்கள் தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும். பாதுகாப்பாக இருங்கள்.' என பதிவிட்டிருக்கிறார்.

கொரோனா தொற்று பரவ அச்சம் காரணமாக மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை ராகுல் காந்தி ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08