உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு சீன கொள்கைகள் பதிலளிக்க வேண்டும் 

Published By: J.G.Stephan

20 Apr, 2021 | 01:10 PM
image

“உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு சீன கொள்கைகள் பதிலளிக்க வேண்டும்” என அமெரிக்க காங்கிரஸின் சீன ஆணையகத்திற்கான முன்னாள் பணிப்பாளர் பீட்டர் மாட்டிஸ் கூறினார். 

வெளியுறவுக்கொள்கை தொடர்பான கருத்துத் தொகுப்பின்போது, சின்ஜியாங் பருத்தியைப் பயன்படுத்த மறுப்பவர்களை தண்டிப்பதற்கான சீனாவின் உந்துதல் பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக” பீட்டர் மாட்டிஸ் தெரிவித்தார். 

“உய்குர்களுக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, உய்குர் மொழி கல்வி முற்றிலுமாக அகற்றப்படும் நிலைமை காணப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில், சீனாவின் மாநில கவுன்சில் உய்குர்களின் துருக்கிய வேர்களை (பூர்வீகத்தை) மறுத்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீன தேசத்தின் ஒரு பகுதியாகவே சின்ஜியாங் இருப்பதாகக் கூறப்பட்டது.

சீனா உய்குர் மதத் தலைவர்களைத் தடுத்து வைத்திருந்தாலும், இஸ்லாமிய சமூக நலன்களை மீறுமாறு உய்குர்களை கட்டாயப்படுத்தினாலும், அவர்களின் புனித தலங்களை அழித்தாலும், முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகவே பெய்ஜிங் கூறுகிறது. இவை அனைத்துமே உய்குர்களுடன் இணைகின்றோம் என்ற பெயரில் செய்யப்பட்டுள்ளன சீன நவீனத்துவத்தின் புதிய பதிப்பு” என்றும் அவர் கூறுகின்றார்.

சீனாவின் நடவடிக்கைகள் ‘மிகத் தெளிவாக’ இனப்படுகொலையின் ஐந்து விடயப்பரப்பில் நான்கை பூர்த்தி செய்கின்றன. ஒரு இனப்படுகொலையை அறிவிக்க ஒரு நிபந்தனை போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெகுஜனக் கொலைகளுக்கு இதுவரை எந்த ஆதாரங்களும் வெளிவரவில்லை என்றாலும், அதை செயல்படுத்தக்கூடிய நிலைமைகள் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. சீனக் கொள்கைகளைப் பற்றி யூதக் குழுக்கள் அதிகளவில் பேசுகின்றன. ஏனென்றால் சீனாவின் உய்குர்களை வீழ்த்தும் கொடுமையை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றார்.

உய்குர்களில் வயது வந்தவர்கள் முகாம்களில் அல்லது முறையாக சிறைச்சாலை அமைப்பையொத்த இடங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால்  தடுப்புக்காவலில் காணமலாக்கப்படுதலை எந்த நிலைமைகளும் மட்டுப்படுத்தப்படவில்லை. பாரம்பரிய இறுதிச் சடங்குகள், வெளிநாடுகளுக்குச் செல்லுதல், மது மற்றும் சிகரெட்டுகளைத் தவிர்ப்பது, பெற்றோர் இறக்கும் போது பகிரங்கமாக வருத்தப்படுவது, பிரார்த்தனை செய்வது, விரதம் இருப்பது, ஒரு மசூதிக்குச் செல்வது, சொந்த மொழியைப் பேசுவது உள்ளிட்ட விடயங்கள் அனைத்துக்கும் மட்டுப்பாடுகள் அதிகமுள்ளன என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். 

உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு உட்படுத்தியதன் மூலமாகவும் சீனா உலகளவில் கண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பைடன் நிர்வாகம் சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை 'இனப்படுகொலை” என்று அறிவித்தது.  அத்துடன் தனது நாட்டின் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2020 அறிக்கையில், சீனாவில் இனப்படுகொலை நடைபெறுகின்றது என்றும் சின்ஜியாங்கில் பெரும்பான்மையான உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரியில், கனடாவின் பாராளுமன்றத்தில் தனது நாட்டு பிரஜைகளான உய்குர் சிறுபான்மை மக்களை சீனா நடத்தும் முறையானது‘ஒரு இனப்படுகொலை’ என்று அறிவித்ததோடு பெருமளவில் வாக்குகளுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு பாராளுமன்றில் ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதமின்றி 266 பேர் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. சிலர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை. 

நெதர்லாந்து பாராளுமன்றமும் உய்குர் சிறுபான்மையினரை சீனா பேணும் முறையானது, ‘ஒரு இனப்படுகொலை’ என்று தீர்மானம் எடுத்துள்ளது. முதன்முதலாக இத்தகைய தீர்மானம் எடுத்த ஐரோப்பிய நாடாக அதுவே காணப்படுகின்றது. 

அதேநேரம் பெய்ஜிங், உய்குர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை முழுமையாக மறுத்துள்ளது, அதேநேரத்தில் சீனாவில் ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள் கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன, இந்த நிலைமையானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன மற்றும் சமூகத்தின் மீதான கொடூரமான ஒடுக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது.

உய்குர் விடயத்தினை அதிகாரிகள் ‘இனப்படுகொலை’ என்று அழைத்தாலும் அல்லது வெட்கக்கேடான குற்றங்களாக குறிப்பிட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், சீனாவின் கொள்கைகள் காணப்படுகின்றன. ஆகவே சீனாவின் கொள்கைகள் இந்த தருணத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கான பதிலை வழங்க வேண்டும். அவ்வாறான பதிலை கோருவதற்கு சி.சி.பி உத்தேசித்துள்ளதை உலகமே ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் மாட்டிஸ் குறிப்பிட்டார். 

நன்றி: டெய்லிஹண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22