இலங்கையின் பொருளாதாரம் கறுப்புப்பணமாகும் சாத்தியம்: எச்சரிக்கிறது முன்னிலை சோஷலிசக் கட்சி..!

Published By: J.G.Stephan

19 Apr, 2021 | 05:22 PM
image

(செ.தேன்மொழி)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்புப்பணத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக கருதப்பட வாய்ப்புள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி தலைவர் புபுது ஜாகொட எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியினரினால் அமைதிவழி ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கறுப்புப்பண சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய வர்த்தகர்களின் தளமாக துறைமுக நகரம் மாற்றப்படும். இதனால் இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பொருளாதாரமாகவே கருதப்படும்.

இதேவேளை , இந்த துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும்  அதிகார போட்டி மேலும் உக்கிரமடைவதுடன் , அதன் காரணமாக நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். மேலும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்குவதன்  ஊடாக சீனாவின் ஆதிக்கம் நாட்டுக்குள் அதிகரிக்கும். இதனால் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு காணப்படும் உரிமைகள் இரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.












முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04