எதிர்வுகூறும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை

Published By: Digital Desk 2

19 Apr, 2021 | 05:14 PM
image

என்.கண்ணன்

''வெளிப்புற நிபுணர்கள் மற்றும் புலனாய்வு சமூக ஆய்வாளர்களுடன் ஆலோசித்து, தேசிய புலனாய்வுச் சபையின் மூலோபாய நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள  இந்த அறிக்கை, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கையையோ அல்லது அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டையோ பிரதிபலிக்கவில்லை''

 

'' அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளும், வீழ்ச்சிகளும், தெற்காசியாவில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சீனாவின் பக்கம் சாய்ந்து செல்லும் நிலையை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார நலன்களுக்காக, இந்தியா, பூட்டான் தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகள், சீனாவின் தயவை நாடும் ''

 

அமெரிக்கா எதிர்காலத்தின் மீது அதிக அக்கறையுடன் செயற்படுகின்றன ஒரு நாடு. உலகின் முதல்நிலை வல்லரசு என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அடுத்த 5, 10, 25, 50, 100 ஆண்டுகள் என்று கட்டம் கட்டமாக திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறது அமெரிக்கா.

தமது நாட்டுக்குள்ளேயும், சர்வதேச அரங்கிலும் நிகழக் கூடிய மாற்றங்கள், உருவாகக் கூடிய அச்சுறுத்தல்களை முன்னரே கணித்து, தயார்படுத்தல்களை மேற்கொள்வது அமெரிக்காவின் வழக்கம்.

இதற்காக அமெரிக்கா பல்வேறு கட்டமைப்புகள், குழுக்களை உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், உலகின் போக்கையும், அதில் அமெரிக்காவின் வகிபாகத்தையும் தீர்மானிப்பதற்கான ஆய்வுகளை செய்வதற்கு இரண்டு விதமான கட்டமைப்புகளை வைத்திருக்கிறது.

ஒன்று, அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும், அதன் கொள்கையை வெளிப்படுத்தும் கட்டமைப்பு.

இன்னொன்று, அமெரிக்காவின் கொள்கையை வெளிப்படுத்தாத, அதன் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்காத ஆனால் உள்ளக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை முன்வைக்கக் கூடிய சுயாதீன நிபுணர்களை கொண்ட கட்டமைப்பு.

 

இவ்வாறான பரந்துபட்ட மூலோபாய ஆய்வுக் குழுக்களினால் தான், அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு, புலனாய்வு, கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றனதீர்மானிக்கப்படுகின்றன.

 

இவ்வாறான ஒரு, பரந்துபட்ட ஆய்வை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல்  8ஆம் திகதி வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு சபை (National Intelligence Council) வெளியிட்டுள்ள உலகளாவிய போக்குகள்  (Global Trends Report)  என்ற இந்த அறிக்கை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தயாரிக்கப்படுவது

போட்டிகள், சவால்கள் நிறைந்த உலகில், அடுத்த 20 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு சூழலை வடிவமைப்பதற்கான படைகள் மற்றும் காரணிகள் குறித்த பகிரங்கமான மதிப்பீட்டைச் செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22