துறைமுக நகர்த்திட்டம் மூலம்  நாடு அதல பாதாளத்தில் விழும் 

Published By: MD.Lucias

19 Aug, 2016 | 08:50 AM
image

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்  

மேலும் அரசாங்கத்தில் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள துறைமுக  நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் விடுதலை முன்னணி வெளியிடும். அந்த அறிக்கையின் பிரகாரம் நகர அபிவிருத்தி திட்டத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட உள்ள பிரதான பிரதிகூலங்கள் அனைத்தும்  உள்வாங்கப்பட்டிருக்கும். 

 துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் முற்று முழுதாக நீதிக்கு முரணான வகையிலேயே உருவாக்கப்பட உள்ளது. மேலும் அரசாங்கத்துக்கு சமுத்திரங்களை உள்ளடக்கி அபிவிருத்திகளை  முன்னெடுக்க எந்த விதமான உரிமைகளும் கிடையாது.  அது நாட்டின் சுற்று சூழலுக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதே நேரத்தில் கடல் சார் உயிரினங்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.  மேலும் கடலோர பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து 72 முறைப்பாடுகள்  நகர அபிவிருத்தி திட்டம்  தொடர்பாக கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. எனவே இது தொடர்பாக தெளிவான அறிக்கையொன்று எதிர்வரும் திங்கடகிழமை மக்கள் விடுதலை முன்னணியினால்  வெளியிடப்படும்.  

மத்திய வங்கியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிணை முறிகளுடன்  தொடர்புடைய பிரதான திருடர்களை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு போதும் நீதி நிலை நிறுத்தப்பட வில்லை.  பிணை முறி சம்பவத்துடன் தொடர்புடையவரை விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் மைத்திரி ரணில் இணைந்த தேசிய அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு போதும் நீதி நிலை நிறுத்தப்பட வில்லை.  எனவே  இது தொடர்பாக  உடனடியாக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

யுத்தம் நிறைவுக்கு வந்து    7 வருடங்கள் நிறைவடைந்த நிலையில்  வடக்கு மக்கள் சுதந்திரமான சூழ்நிலையை அனுபவிக்க வில்லை. அது மட்டுமல்லாமல் உரியவகையான பாதுகாப்பு வசதிகளும் குறித்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை. கடந்த அரசாங்கம் பல்வேறு  வாக்குறுதிகளை வடக்கு மக்களுக்கு வழங்கியிருந்தது ஆனால் அந்த வாக்குறுதிகளில் ஒரு வீத  வாக்குறுதியை கூட  நிறைவேற்ற வில்லை. 

யுத்தம்  நிறைவுக்கு வந்த பின்னரும் வடக்கு மக்களின் வாழ்வில் சுதந்திரமான நிலைமை காணப்பட வில்லை. இன்னமும் வடக்கு மக்கள் பல சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே அந்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும்.

   நல்லாட்சி நல்லாட்சி என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒரு சிலர் மார்தட்டிக்க கொள்கின்றனர்.  ஆனால் வடக்கு மக்களின் பிரச்சினைகள்   அவர்களின் சுதந்திரம்  தொடர்பான பிரச்சினைகளுக்கு எவரும் தீர்வு காண முன்வராமை கவலையளிக்கிறது. இது நல்லாட்சிக்கான அடையாளம் இல்லை. எனவே உடனடியாக அரசாங்கம் வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53