மிழ் அர­சியல் கைதி­களை மைத்­திரி அரசு மீண்டும் ஏமாற்­றி­விட்­டது. இது இன­வா­தத்தின் உச்­ச­கட்டம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.தமிழ் அர­சியல் கைதி­கள் விவகாரம் தொடர்­பாக கருத்து கூறிய அரி­ய­நேத்­திரன் பிணையில் விடுதலை செய்­வ­தற்­காக அழைத்துச் செல்­லப்­பட்­ட­வர்­களில் அனே­க­மா­ன­வர்கள் மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில் நிமித்­த­மாக சென்று நாடு திரும்­பும்­போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து 2013ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­ட­வர்­களும் வேறு­சி­ல­ருமே.
உண்­மையில் பல­ வ­ரு­டங்­க­ளாக தடுத்­து­வைக்­கப்­பட்டுள்ள எவ­ரும் நேற்று நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­ல­ப்படவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அழைத்துச் செல்­லப்­பட்ட அப்­பாவிக் கைதி­க­ளை­யா­வது பிணையில் விடு­தலை செய்­யாமல் திரும்­பவும் கால­நீ­டிப்புச் செய்­தமை முழு உல­கத்­தையும் ஏமாற்றும் செய­லா­கவே பார்­க்க மு­டி­கி­றது.
கடந்த காலங்­களில் தமிழ்த் தலை­மை­களின் நெஞ்சில் ஜனா­தி­பதி மஹிந்த நேர­டி­யாக குத்­தினார். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரியோ தமிழ்த் தலை­மை­களின் முதுகில் மறை­மு­க­மாக குத்­து­கிறார் என்­பது மிகத்­தெ­ளி­வாகி­றது.
தமிழ்த் தேசி­ய­க் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் ­தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பாக கடந்ந 2004ஆம் ஆண்டு தொடக்கம் பல தட­வைகள் அனைத்து சிறை­க­ளுக்கும் நேர­டி­யாக சென்று பார்த்து அவர்களின் விடு­த­லைக்­காக பல ­மு­யற்­சிகள் மேற்­கொண்டோம். அப்­போது ஏறக்­கு­றைய 800 தமிழ் அர­சியல் கைதிகள் இருந்­தனர்.
அவர்­களில் படிப்­ப­டி­யாக பலர் விடு­தலை செய்­யப்­பட்டு தற்­போது 217 தமிழ் அர­சி­யல் ­கை­திகள் மட்­டுமே உள்­ளனர். இவர்கள் அனை­வ­ருக்கும் ஒட்­டு­மொத்­த­மாக பொது­மன்­னிப்பு வழங்கி அவர்களை விடு­தலை செய்­ய­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யுடன் தலைவர் சம்­பந்தன் ஐயா கடந்த 10 மாதங்­க­ளாக கதைத்­த­போதும் ஜனா­தி­பதி சிரித்­துக்­கொண்டே சம்­பந்தன் ஐயாவை ஏமாற்­று­வதை இந்த சம்­பவம் தெளி­வாகக் காட்­டு­கின்­றது.
புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளுக்கு அவர் தந்த தீபா­வளி பரிசு தமிழ் அர­சியல் கைதி­களை ஏமாற்­றி­ய­துதான்.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் மேற்கொள்ளும் பூரணஹரத்தால் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை வடக்கு கிழக்கு வாழ் மக்கள் வழங்குங்கள் என்றார்.