உருமாறிய கொரோனா பாதிப்பிற்குரிய புதிய அறிகுறிகள்

Published By: Gayathri

19 Apr, 2021 | 11:48 AM
image

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் 13 கோடி மக்களை பாதித்து, இன்றும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமி, தற்போது உருமாற்றம் பெற்று புதிய வடிவில் இரண்டாவது அலையாக மக்களை தாக்கி வருகிறது. இதற்குரிய புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்கியதன் அறிகுறியாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்டவைகளை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டு இருந்தனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் கிருமி உருமாற்றம் பெற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள். 

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கிருமி தாக்கியவர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். 

அந்த வகையில் கண்களில் பாதிப்பு, கண்கள் வறண்டு காணப்படுதல், தொடர்ச்சியான இருமல், தலைவலி, கண்களில் நிறமாற்றம், நாக்கு உலர்தல், உணவு உண்பதில் சிரமம், உமிழ்நீர் சுரப்பதில் குறைபாடு என பல்வேறு அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

இத்தகைய அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவ உதவியை பெற்று அவர்களின் ஆலோசனைப்படி கொரோனா தடுப்பு ஊசி மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பாதுகாப்பு மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்துடன் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றையும் இவர்கள் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீ தேவி,


தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04