பிரதமர் மஹிந்த தலைமையில் அலரிமாளிகையில் விசேட பேச்சு - ஆராயப்படவுள்ள முக்கிய விடயங்கள்

Published By: Digital Desk 4

18 Apr, 2021 | 06:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நாளை  அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தல், மே தின கூட்டம் மற்றும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உள்ளிட்ட விடயங்கள் இப்பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படவுள்ளன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர்  மாகாண சபை தேர்தல் குறித்து அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளன. குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு  கூட்டணியில் 11  பங்காளி கட்சிகள் ஆரம்பத்தில் எதிர்பினை வெளிப்படுத்தினார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் பங்காளி கட்சிகளின் உறுதியான தீர்மானம்  இச்சந்திப்பின் போது அறிவிக்கப்படவுள்ளன. கூட்டணியின் ஊடாக மே தின கூட்டத்தை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும்,  மே தின கூட்டத்தை தனித்து நடத்த வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

 லங்கா சமசமாஜ கட்சி, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இடதுசாரி முன்னணி  உட்பட பிரதான 5 பங்காளி கட்சிகள் மே தின  கூட்டத்தை  தனித்து நடத்துவதாக குறிப்பிட்டுள்ளன. மே தின கூட்டம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இதுவரையில் உறுதியான தீர்மானத்தை இதுவரையில் அறிவிக்கவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற, இராஜாங்க உறுப்பினர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன   தலைமையிலான கூட்டணியில் இணைந்தே போட்டியிடும் தனித்து செல்லும் நோக்கம் ஏதும் கிடையாது என  சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கல்,   இச்சட்ட மூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்துக்கள்,   இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  அச்சுறுத்தல் விடுத்தார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்து ஆகியவை தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பிலான சட்ட மூலம் குறித்து அரசாங்க தரப்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளன. பிரதமர் தலைமையில் இடம் பெறும் இப்பேச்சுவார்த்தை பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47