கொரோனா அலையும் தேர்தல் நடத்தை விதிகளும்

Published By: Digital Desk 2

18 Apr, 2021 | 10:10 PM
image


எம்.காசிநாதன்


தமிழ்நாட்டில் ‘தேர்தல் அலை’ முடிவுக்கு வந்தவுடன் ‘கொரோனா அலை’ மிக வேகமாக பரவலடையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்னும் அமுலில் இருக்கிறது. 
இச்சூழலில் வந்த இரண்டாவது அலை தாக்கத்தில் இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.





  

‘முதல் அலை , இரண்டாவது அலை’ எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9.47 இலட்சமாகிறது.


தற்போது ‘காபந்து சர்க்காராக’ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருப்பதால், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான அணி தான் முழு வீச்சில் ‘கொரோனா தடுப்பு’ பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 


தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குறிப்பாக செங்கல்பட்டு,  கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சென்னைக்கு அடுத்த படியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றன.







மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மட்டுமே இப்போதைக்கு ஒற்றை இலக்கப் பாதிப்பில் இருக்கின்றன. மற்ற அனைத்தும் இரண்டு இலக்கம் அல்லது அதைத் தாண்டி மூன்று இலக்க  பாதிப்பை தொட்டுவிடும் நிலையில் உள்ளன.


தேர்தல் பிரசாரக் கூட்டங்கள, தேர்தல் நடத்தை விதிகள், அமைச்சர்களும் முதலமைச்சரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடிப் போன சூழ்நிலை ஆகியவற்றால் ‘நோய் தொற்றுக்கான’ புதிய விதை போடப்பட்டது.

இரண்டாவது அலை தாக்குதல் வருகிறது என்று தெரிந்தும்  மக்கள் உஷாராகவில்லை என்பதையே இந்த நோய் தொற்றின் வீரியம் காட்டுகிறது. வெளிநாட்டிலிருந்து வருவோரால் ‘தொற்று அதிகமாகிறது’ என்று செய்திகள் வெளிவந்தாலும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் அவ்வாறு இல்லை. 


இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-18#page-10

 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 







 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21