சீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் !

Published By: Digital Desk 2

18 Apr, 2021 | 12:56 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.



இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகர் நகர்  உட்பட முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது  சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.



இலங்கை விஜயத்திற்கு முன்பதாக கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்திருந்த ஜெனரல் வெய் ஃபெங் அங்கு இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

தென் சீனக்கட்லில் ஏற்பட்ட பதற்ற நிலையில் போது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பியும் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பா விஜயத்தின் போது அந்த நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து ஜெனரல் வெய் ஃபெங் கவனம் செலுத்தியிருந்தார்.


குறிப்பாக ஹங்கேரி, செர்பியா , கிரீஸ் மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான ஜெனரல் வெய் ஃபெங்கின் சந்திப்புகளின் போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் மிக ஆர்வமாக பேச்சப்பட்டுள்ளது.

மறுபுறம் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பிய நாடுகள் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று அழைக்கப்படுகின்ற நேட்டோ படைகளையும் குறித்த கடற்பகுதிக்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. தென் சீன கடலில் இவ்வாறானதொரு பாரிய எதிர்ப்பை எதிர்பாராத சீன பின்வாங்கியது.

ஆனால் தென் சீன கடலில் தமது திட்டங்களை முன்னெடுக்கும் போது இவ்வாறானதொரு எதிர்பலை மீண்டும் வந்து விட கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயற்படும் வகையிலேயே சீன பாதுகாப்பு அமைச்சரின் ஐரோப்பிய விஜயம் அமைந்திருந்தது.


ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு விஜயமும் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதுடன் பிராந்தியத்தில் ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள கூடிய வகையிலான மூலோபாயத்தை வகுப்பதாகவே அமையும் என  பாதுகாப்பு துறைசார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை சீனாவின் மேலாதிக்கத்தின் கீழ் வராமல் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய 'குவாட்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற் பிராந்தியத்தில் சீனாவின் தந்திரோபாயம் வெற்றிப்பெற்று விட கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே குவாட் காணப்படுகிறது.

குவாட் காரணமாக இந்து மா சமுத்திரம் மெதுவாக இராணுவமயமாக்கலுக்கு உட்படுவதோடு இங்கு ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள் இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ உறவுகளை சீனா வளர்த்துக்கொள்கிறது.

பாகிஸ்தானுடனம் மிக பலமான இராணுவ உறவை சீனா கொண்டுள்ளது. இவ்வாறனதொரு பின்னணியில் இலங்கை வரும் ஜெனரல் வெய் ஃபெங்க் இலங்கையின் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் முக்கியம் பெறுகின்றது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08