ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா “புதிய நாடு – ஒருமித்த பயணம்” என்ற தொனிப்பொருளில்  நாளை (19) மாலை 3.00 மணிக்கு மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில், ஐந்து வருடங்களில் முன்னோக்கிய பயணத்தின் முதலாவது வருடபூர்த்தி விழா கோலாகலமாக  நடைபெறவுள்ளது. 

இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர். 

சுதந்திரக் கட்சி, ஐ.தே.கட்சி தலைமையிலான இணக்கப்பாட்டு தேசிய அரசு கடந்த ஒரு வருட காலத்தில் சந்தித்த சவால்கள், சர்வதேசத்தில் இலங்கைக்கு கிடைத்த அந்தஸ்து, கிடைத்த வெற்றிகள், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் தமது உரைகளில் தெளிவுப்படுத்தவுள்ளனர்.