சீன காலணித்துவம் குறித்து குறிப்பிடப்பில்லை : அரசாங்கத்தின் திட்டங்களை தடுக்க திட்டமிட்ட சதி - கப்ரால்

18 Apr, 2021 | 07:10 AM
image

 (இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகர  பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தில் எவ்விடத்திலும் சீன காலணித்துவ ஆட்சி  தொடர்பில் குறிப்பிடப்பில்லை. 

பொருளாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் வகுக்கும் திட்டங்களை தடுக்க திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்ககப்படுகின்றன.  

கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு 83 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும் என  நிதி மூலதனச்சந்தை , மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்   அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் தவறான கருத்துக்கள்  அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தி அதனூடாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வீழ்ச்சியடைந்துள்ள  பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். பாரம்பரியமான  வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுக முடியாது. 

புதிய  கொள்கைக்கு அமைய புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதற்காகவே   கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிப்பிற்கான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் கொழும்பு துறைமுக நகரத்தை சீன காலணித்துவமாக்கும்   ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை. நாட்டின் வளங்களை பிற தரப்பினருக்கு வழங்க வேண்டிய  தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறி வரும் உலக  பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவது  கட்டாயமாகும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம் மூலம்  சபை முதல்வரினால் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

சர்வதேச வர்த்தகம், கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரை கடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் ,வியாபார வழிமுறைகள் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு, பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும்

கொழும்பு துறைமுக நகரத்தின் ஊடாக 83 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்கள் பெற்றுக் கொள்ள முடியும். தகுதியானவர்களுக்கு   துறைமுக நகரத்தில் உரிய அந்தஸ்த்து வழங்கப்படும். துறைமுக நகரம் சீனர்களுக்கு மாத்திரம் என்று குறிப்பிடப்படும் கருத்து முற்றிலும் தவறானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34