தெரணியகலை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

17 Apr, 2021 | 07:35 PM
image

(செ.தேன்மொழி)

நீர்வழங்கல் அதிகார சபைக்கு சொந்தமான நீர் அளவு மானிகளுடன் கைது செய்யப்பட்ட  தெரணியகலை பிரேதசபைத் தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தெரணியகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புருகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், நீர்வழங்கல் வேலைத்திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் காணாமல் போயுள்ளதாக  கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இந்த வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரணியகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , களஞ்சியசாலையின் எழுதுவிளைஞர் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்யதிருந்தனர். இந்நிலையில் , காணாமல் போயிருந்த நீர் அளவு மானிகளில் , 98 மானிகள் தெரணியகலை பிரதேச சபைத் தலைவரிடமிருந்த கைப்பற்றப்பட்டதுடன் , பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்தேசக நபர் அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிவான் அவரை நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26