காணாமல் போனோர் அலுவலகத்தில் 1981 ஆம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் காணாமல் போன அனைத்து மனிதர்கள் தொடர்பிலும் ஆராயப்படும். அதனால் இது புலிகள் தொடர்பில் மட்டும் ஆராயும் ஒரு அலுவலகம் என்று முத்திரையிட வேண்டாம் என ஸ்ரீ சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் அணியின் தலைவருமான சாந்த பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதநத்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.