நடிகர் விவேக்கின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்

Published By: Digital Desk 3

17 Apr, 2021 | 02:35 PM
image

நடிகர் விவேக் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை காலமானார். 

நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், 

“பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக்கின் நகைச்சுவை மற்றும் அறிவுப்பூர்வமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17