உறவுகளை மீள் இணைக்கும் பாகிஸ்தானின் முயற்சி

Published By: Digital Desk 2

15 Apr, 2021 | 01:56 PM
image

கம்ரான் யூசப் 

அமெரிக்காவுடனான ‘இருதரப்பு  உறவுகள்’ என்று பாகிஸ்தான் கரிசனை கொண்டிருந்தாலும், அதற்கு அமெரிக்கா மந்தமான பிரதிபலிப்பையே செய்கிறது. 

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது, இஸ்லாமாபாத் வாஷிங்டனுடனான தனது உறவுகளை ‘பொருளாதார ஒத்துழைப்பின்’ அடிப்படையில் மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. 

ஜனாதிபதி பைடனுக்கு பாகிஸ்தான் பற்றிய புரிதலும் அந்நாட்டைப் பற்றிய அவரது அறிவும் போதுமான அளவில் காணப்படுகின்றது. 

அவ்வாறான நிலையில் அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த விளையும் பாகிஸ்தானுக்கு பைடன் நிர்வாகம்  இதுவரையில் சாதகமான சமிக்ஞையை அளித்திருக்கவில்லை.

இந்த நிலையில் பைடனின் நிருவாகத்துடன் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குரிய பரந்துபட்ட அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குழுவொன்றை நியமித்துள்ளார். 

பாகிஸ்தான் அமெரிக்காவினுடைய இருதரப்பு உறவுகளை ஏற்படுத்தும் அணுகுமுறையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மையப்படுத்தி நம்புவதை விடவும் பொருளாதாரத்தையே முன்னிலையாக கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றது. 

அத்துடன் வர்த்தக உறவுகள், முதலீடு, எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய விடயங்களிலும் அமெரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற பாகிஸ்தான் எதிர்பார்க்கின்றது. 

“நாங்கள் அமெரிக்காவுடனான உறவை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மூலமாக மட்டுமே உருவாக்க விரும்புகிறோம். மாறாக சீனா, இந்தியா ஆகியவற்றின் கொள்கைகளுக்கு அமைவாக உருவாக்க விரும்பவில்லை” என்று மூத்த அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனாலும், அமெரிக்காவின் புதிய நிருவாகம் அதற்கு மந்தமான பிரதிபலிப்பையே செய்கின்றமையானது பாகிஸ்தானுக்குச் சிக்கலாக உள்ளது. 

வெள்ளை மாளிகையின் பொறுப்புக்களை ஏற்று இரண்டரை மாதமாக பைடன் அங்கிருக்கின்ற போதும் இதுவரையில் தொலைபேசியில் கூட அவர் பாகிஸ்தானுடன் பேசவில்லை. 

புதிய அமெரிக்க ஜனாதிபதி பதிவியில் அமர்ந்ததும், உலகநாட்டு தலைவர்களுடன் பேசுவது சம்பிரதாயமாகும். அவர் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமரிடம் ஆகியோருடன் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளார். 

இருந்தபோதிலும், பைடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நேரடி தொடர்பை இன்னும் ஏற்படுத்தவில்லை.

ஆப்கானிஸ்தான் ‘எண்ட் கேம்’ படை நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு உண்டு என்ற நிலையில் பைடன் இன்னமும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாமை ஆச்சரியமாக உள்ளது. 

சிலவேளை ஆப்கானிஸ்தானில் நிரந்தர சமாதான முன்னெடுப்புகளுக்கு பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை அந்நாடு வழங்கினால், பைடன் விரைவில் பிரதமர் இம்ரான் கானுடன் பேசுவார் என்று பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாத இறுதியில் அமெரிக்கா நடத்தவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டிற்கு பைடன் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மெய்நிகர் வழியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ்  உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கெடுக்கவுள்ளனர். 

இந்த மாநாட்டிற்கு பிரதமர் இம்ரான் கான் அழைக்கப்படாமையால் அவர் குழப்பமடைந்துள்ளார். ஜனாதிபதி பைடனின் காலநிலை மாற்றம் குறித்து சிறப்பு தூதர் ஜோன் கெர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு விஜயம் செய்தபோதும் இஸ்லாமாபாத்தை தவிர்த்தார்.

இதேபோல், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் சமீபத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்தார், ஆனால் அவர் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. இருப்பினும் அவர் காபூலில் இருந்தபோது பாகிஸ்தான் இராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுடன் தொலைபேசியில் பேசினார்.

இவ்வாறான நிலைமைகள் முன்னேற்றகரமானவை என்று பாகிஸ்தான் கருதுகின்றபோதும் அதிகாரிகள் அமெரிக்க, பாகிஸ்தான் உறவில் மந்த நிலை இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது உச்சநீதிமன்றத்தால் டானியல் பெர்லின் கொலை தொடர்பான சூத்திரதாரி விடுவிக்கப்பட்டார். அமெரிக்க பத்திரிகையாளரின் கொலைகாரர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெளிவான கூறியபோதும் அதனை பாகிஸ்தான் செவிமடுக்கவில்லை. இந்த விடயம் புதிய அமெரிக்க நிர்வாகத்தை கோபப்படுத்தியுள்ளது. 

ஆனால் டானியல் பெர்ல் கொலை வழக்கு மட்டும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா மந்தமான அணுகு முறைகளைப் பின்பற்றுவதற்கு பின்னணியில் உள்ள ஒரே காரணம் என்று கூறமுடியாது. வேறு சில காரணங்களும் உள்ளன. 

பாகிஸ்தானை சீனாவிடமிருந்து விலகிச் செல்வதற்கான அமெரிக்க நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. 

பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சீனாவுடனான தனது உறவுகளில் சமநிலையை நிலைநிறுத்த முயற்சித்தாலும், வாஷ்ங்டன் பாகிஸ்தான் நாட்டின் அணுகுமுறையில் தெளிவான மாற்றத்தை விரும்புகிறது.

பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க சீனா போட்டி ஆழமடையப் போகிறது. புதிய அமெரிக்க அரசாங்கம் சீனாவை வெவ்வேறு வழிகளில் எதிர்கொள்ள முயற்சிப்பது மட்டுமல்லாமல், ஜனாதிபதி பைடன் சமீபத்தில் சீனாவின் பட்டி மற்றும் மண்டலம் முயற்சிகளுக்கு போட்டியாக அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டத்தை முன்மொழிந்துள்ளார். 

இந்நிலையில் “ஆம், நாங்கள் சீனாவுடனான உறவுகளை கொண்டிருக்கின்றோம். ‘சீன-பாகிஸ்தான் பொருளாதார வாயில்’ எங்கள் வளர்ச்சிக்கு மையமானதொரு திட்டமாகும். அதனால் சீனா சார்புடைய கண்ணாடி  மூலம் நாம் பார்க்கப்பட  வேண்டும் என்று அர்த்தமல்ல" என்று பாகிஸ்தானை நியாயப்படுத்தும் அதிகாரி ஒருவர், அமெரிக்க, சீன சண்டையில் ஒரு கொள்கையை பின்பற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடியாக பேச வாய்ப்பு கிடைக்கும்போது பிரதமர் இம்ரான் கான்  பாகிஸ்தானின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். ஆனால் அந்த நேரடிப் பேச்சு எப்போது என்பது இப்போதைக்கு தெரியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48