ஆரோக்கியமான வாழ்விற்கு போசாக்குள்ள உணவு” மத்திய நாட்டு விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மத்திய மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய நாட்டு விவசாய மற்றும் கால்நடை வள கண்காட்சி இன்று நுவரெலியா நகர மண்டபவளவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியின் நோக்கம் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மாகாணத்தின் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாயத்துறை சம்பந்தமான அறிவினை வழங்குதல், விவசாயத்தினை மேம்படுத்துதல் ஆகியனவாகும்.

நுவரெலியா, கண்டி, மற்றும் மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பால் பண்ணைகள் மூன்றுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்கள் மூவருக்கும் இதன்போது ஜனாதிபதியினால் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கறக்கும் இயந்திரம் மற்றும் புற்களை துண்டாக்கும் இயந்திரம் ஆகியன வழங்கி வைக்கும் அடையாள நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.

அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.