'' சந்தோஷமாக இருக்க முடிவதில்லை : ஒவ்வொரு புத்தாண்டிலும் எமது பிள்ளைகள் நினைவுக்கு வருகின்றனர்" மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து இன்றுடன் 4 ஆண்டுகள் 

14 Apr, 2021 | 08:05 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

31  உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு ஏற்பட்டு இன்றுடன்  4 ஆண்டுகள் பூரத்தியாகின்றது. 

இந்த குப்பை மேடு சரிவின் காரணமாக வீடுகள் இழந்தோருக்கு வீடுகள் கிடைக்கப்பெற்றாலும் தமக்கு சொந்தமாகவிருந்த வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்களுக்காக இதுவரையிலும் நஷ்ட ஈடு எதுவும் கிடைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயொருரவர் கூறுகையில்,

“நாங்கள் குப்பை மேடுகளில் வீடுகளை அமைக்கவில்லை. நாம் இருந்த இடங்களிலேயே குப்பைகளை வந்து கொட்டினர். 

குப்பை மேடு அனர்த்தம் ஏற்பட்டதை அடுத்து, நியாயத்தை வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தியிருந்தோம். 

எனினும், அவை எதற்கும் இதுவரையிலும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. 

நாம் எமது பிள்ளைகளை இழந்தோம். ஒவ்வொரு புத்தாண்டு காலத்திலும் எமது பிள்ளைகள் நினைவுக்கு வருகின்றனர்.  

சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. இது தொடர்பில் எங்களுக்கு நியாயத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 

குப்பை மேடு சரிவின்போது உடுத்திருந்த உடையுடனேயே வெளியேறினோம். எமது வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் பொருட்கள் என்பவற்றை எடுக்காமலேயே சென்றோம். 

இவற்றுக்கெல்லாம் நஷ்ட ஈடாக இரண்டரை இலட்சம் ரூபாவை மாத்திரமே வழங்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து இலட்சம் ரூபா வழங்கியிருந்தனர். 

வீடு கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இரண்டடையும் செய்ய முடியாதல்லவா ? எமது சொத்துக்களுக்கு எந்த வித நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை” என்றார்.

இது குறித்து தந்தையொருவர் கூறுகையில்,

இது மறக்க முடியாத சம்பவம்.  நஷ்ட ஈடுகள் சில கிடைத்தன. ரூபா இரண்டரை இலட்சம் ரூபா கிடைத்தது. 

எமது இருப்பிடங்களில் குப்பைகளை கொட்டினர். அதுவும் 350 அடிக்கு உயரமாக குப்பை மேடு காணப்பட்டது. 

இது மிகவும் அபாயகரமாகவே இருந்தது. இங்கிருந்த 180 வீடுகள் பாதிக்கப்பட்டன. எமக்கான நஷ்ட ஈடு வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அதில்  நியாயம் கிடைக்கவில்லை என்றே நாம் எல்லோரும் உணர்கிறோம்” என்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான சகல நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டதாகவும், வியாபார ரீதியான நஷ்ட ஈடு மாத்திரமே வழங்குவதற்கு எஞ்சியிருக்கிறது. 

அவர்களுக்கான ஏனைய தேவைகளை மற்றும் நஷ்ட ஈடுகளை வழங்குவது தற்போதுள்ள அரசாங்கத்தின் கடமையாகும் என கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30