மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை 19 ஆம் திகதிவரை தொடரும்

14 Apr, 2021 | 07:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களுக்காக கடந்த 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் புகையிர சேவையை மீண்டும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

புத்தாண்டுக்கு தங்களது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக மேற்கொண்டுள்ள போக்குவரத்து சேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களுக்காக கடந்த 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் புகையிரத சேவை  13 ஆம் திகதிவரை இடம்பெற்றது. 

இதன்போது கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும்  போதுமானளவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 24 மணி நேரம் சேவையை மேற்கொண்டிருந்தது.

இதனால் புத்தாண்டு சமயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சிரமமின்றி செல்வதற்கு வசதியாக இருந்தது. அத்துடன் புத்தாண்டு தினத்திலும் மக்களின் போக்குவரத்து தேவைக்காக போதுமானளவு பஸ் சேவைகள் இடம்பெற்றன.

அதேபோன்று புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் அலுவலக இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கின்றோம். 

நாளை 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை இந்த விசேட போக்குவரத்து சேவை இடம்பெறும். 

அத்துடன் இம்முறை புத்தாண்டில் விசேட போக்குவரத்து சேவையின்போது பயணிகளிடம் மேலதிக பணம் அறவிடாமல் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27