இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டும் புத்தாண்டு -  வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்

13 Apr, 2021 | 08:49 PM
image

சிங்கள - தமிழ் புத்தாண்டு என்பது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட வரலாற்றின் பாரம்பரியமான வாழ்வியல்  என்று வர்ணிக்க முடியும். நாட்டின் தேசிய ஒற்றுமையை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் மகத்தான கலாச்சார விழாவான புத்தாண்டை மிகுந்த பாரம்பரியத்துடனும், மகிமையுடனும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சகவாழ்வு, இன நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை பறைசாற்றுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பெறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய போராட்டம் நிறைந்து அமையும் இந்தப்புத்தாண்டு.

அந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டுகின்ற சிங்கள - தமிழ் புத்தாண்டு போன்ற பண்பாட்டு விழாக்கள் அடிப்படையில் சமூகத்திற்கும் உலகிற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்.

இயற்கையின் ஆசீர்வாதங்களில் இருந்து சம்பாதித்த செல்வத்தின் நிறைவுப் பலன்களை கெளதம புத்தர் உலகிற்கு வழங்குதல் மற்றும் உலகத்தின் இருப்புக்கு சூரியனின் தீர்க்கமான பங்கிற்கு நன்றி தெரிவித்தல் என்பது வரலாற்று ரீதியாக  இலங்கையர்கள் அன்றும், இன்றும், என்றும் பின்பற்றும் செயலாகும்.

இந்த ஆண்டும், சிங்கள புத்தாண்டு கோஹாவின் குரலால் அல்ல, "கொரோனாவிலிருந்து பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. 

அதேபோன்று ‘பிலவ’ தமிழ்ப் புத்தாண்டும் எதிர்பார்ப்புடன் கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தில் புனிதமான பாற்சோறை தயாரிப்பதற்குக் கூட எதிர்பார்ப்பு மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். 

கடந்த 2020 தொடக்கம் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமான கொவிட் 19 வைரஸை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இயற்கை அன்னையானவள் உலக மக்களை கஷ்டமான காலங்களில் சிந்தித்து செயற்படுத்துவதில் ஒரு புதிய பாடத்தை கற்பித்துள்ளாள்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையர்களாக நாம் கொண்டாடும் சிங்கள - தமிழ்  புத்தாண்டு நாட்டு மக்களுக்கு இன்னல்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, சுபீட்சம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04