5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் திண்டாடும் மக்கள்

13 Apr, 2021 | 10:18 AM
image

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதில் சீரான முறைமை கடைப்பிடிக்கப்படாமையினால் உரியநேரத்திற்கு அவற்றை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.  

பண்டிகை காலத்தை முன்னிட்டு சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அவசரமாக அறிவித்திருந்தது.

அந்தவகையில் நேற்றைய தினத்திலிருந்து குறித்த தொகையினை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அவசரமாக முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானத்தால் வவுனியாவின் சில கிராமசேவகர் பிரிவுகளில் அதிகமான பொதுமக்கள் திரண்டுள்ளதுடன்  நேற்று இரவு 8 மணிக்குப்பின்னரும் அலுவலகங்களில் காத்திருந்து குறித்த தொகையினை பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

முறையான ஒரு திட்டம் வகுக்கப்படாமல் அவசரமாக அரசினால் குறித்த அறிவிப்பு வெளியாகிமையால் உரிய காலத்திற்குள் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளமுடியாமல் பொதுமக்கள் திண்டாடிவருவதுடன், அவற்றை வழங்குவதில் அரச ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சில கிராமங்களில் பயனாளர் பட்டியல் தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04