திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேச காட்டுப் பகுதியில் யுத்த ஆயுதங்கள் சிலதை இன்று காலை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். 

மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.