யாழில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்

Published By: Digital Desk 4

12 Apr, 2021 | 04:22 PM
image

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் கொரோனா கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் இன்று காலை முதல் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த பகுதிகள் இன்றைய தினம் மதியம் வரையில் விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களும் தொற்றாளர்களும் : சில பகுதிகள்  விடுவிப்பு : புதிதாக சில பிரதேசங்கள் முடக்கம் | Virakesari.lk

திருநெல்வேலி சந்தை வியாபரிகள், கூலி தொழிலாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபர நிலையங்கள் மூடப்பட்டன. 

அத்துடன் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவான ஜே 114 பிரிவினுள் எவரும் உள் வரவோ வெளியேறவோ அனுமதிக்கப்படாது கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்களை  திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை திறக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. 

அத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை 6 மணி முதல் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிபுரம் மற்றும் பாற்பண்ணை பகுதிகளை தவிர ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினம் மதியம் வரையில் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டு உள்ளத்துடன், வேலைக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு மட்டுமே பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கின்றனர். 

இதேவேளை காவல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் கேட்ட போது தமக்கு இப்பகுதி விடுவிக்கப்படுவதாக எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38