இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கை தவறவிடும் பிரிட்டன் பிரதமர்

Published By: Vishnu

11 Apr, 2021 | 10:58 AM
image

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்து கொள்ள மாட்டார்  என டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் கொரோனா வைரஸ் விதிமுறைகளின் கீழ் ஏப்ரல் 17 விண்ட்சர் கோட்டையில் நடைபெறும் பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள 30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த இறுதி சடங்கில் இளவரசர் பிலிப்பின் மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் பிற நெருக்கிய குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பிரதம அமைச்சர் அரச குடும்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட விரும்புகிறார், எனவே முடிந்தவரை பல குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க சனிக்கிழமை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்" என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இளவரசர் பிலிப்புக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக எட்டு நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50