உலகளாவிய போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயார் - இந்தியா

11 Apr, 2021 | 07:36 AM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்புமருந்து தொடர்பில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் கடப்பாட்டின் கீழ் 85 நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அமைதிகாக்கும் படையினருக்கும் இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை 64.51 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்புமருந்துகளை வழங்கியது.

இதன்கீழான தடுப்புமருந்துகள் கடந்த வாரம் ஆசிய, பசுபிக் மற்றும் தென் அமெரிக்க பிராந்தியங்களிலுள்ள நாடுகளிடம் கையளிக்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1.2 மில்லியனுக்கும் அதிக அஸ்ட்ரசெனிகா தடுப்புமருந்து கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கையை வந்தடைந்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37