பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

10 Apr, 2021 | 03:40 PM
image

(வீ.பிரியதர்சன் )

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் 10, 12, 13 மற்றும் 14 ஆம் சரத்துகளில் உள்ள உரிமைகளை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மீறுகின்றமைக்கு எதிராகவே குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் நாட்டு பிரஜைகளின் பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விதிமுறைகள் பரந்த அளவில் காணப்படுவதால் நடைமுறைப்படுத்தும் போது அது சட்டவரையறையை மீறக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும்  மேற்பார்வைக்கான பொறிமுறை காணப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகார வரையறையை மீறும் வகையில் இந்த புதிய விதிமுறைகளில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இன, மத அடிப்படையில் எதிர்மறையான கருத்துக்களை தோற்றுவிக்கக் கூடியதாகவும் இன, மத குழுக்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை செலுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33