ஜே.வி.பி.க்கு எழுந்துள்ள புதிய சந்தேகம்

Published By: Digital Desk 3

10 Apr, 2021 | 10:36 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தகாலத்தில் அரசாங்கத்துக்கு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டவர்கள் ஏப்ரல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு அரசாங்கம் சம்பளம் வழங்கி பயன்படுத்தியவர்களுக்கு எந்த காலத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கியது நிறுத்தப்பட்டது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். அத்துடன் தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மைத்திரி, ரணில் அரசாங்கம் புலனாய்வு துறையின் தகவல்களின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். தகவல் கிடைத்தும் அதுதொடர்பில் அசமந்தப்போக்கில் இருந்த கடந்த அரசாங்கம் இந்த தாக்குதலின் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.

அத்துடன் அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டவர்கள் ஏப்ரல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் நபர்களை அரசாங்கம் சம்பளம் வழங்கி வைத்திருந்தது, அனைவரும் தெரிந்த விடயம். அவ்வாறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் நபர்களை பயன்படுத்தியதும், அவர்களுக்கு சம்பளம் வழங்கியதும் தவறு என நாங்கள் தெரிவிக்கவில்லை.

ஆனால் இவ்வாறு சம்பளம் வழங்கி அரசாங்கம் பயன்படுத்தியவர்களுக்கு எந்த காலத்தில் சம்பளம் வழங்குவது நிறுத்தப்பட்டது? தற்போது அவர்களின் நிலை என்ன? இதுதொடர்பாக எந்த பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லை. இவ்வாறு சம்பளம் வழங்கி பயன்படுத்தப்பட்டவர்கள் தற்போதும் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும் ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தை  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து இந்த அரசாங்கத்துக்கு மேற்கொண்டுவந்தது. அந்த அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கே, தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி என அமைச்சர் சரத் வீரசேகர வெளிப்படுத்தி இருக்கின்றார். அமைச்சரின் இந்த கூற்று சிறுபிள்ளைத்தனமானதாகும்.

அத்துடன் நெளபர் மெளலவி 2014 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதியுடன் இணைந்துகொண்டு, அவர் இலங்கையில் அந்த அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டு வந்ததாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். 2041 இல் எமது நாட்டில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மஹிந்த ராஜபக்ஷ். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோத்தாபய ராஜபக்ஷ.  அன்று இந்த அரசாங்கத்துக்கு இதனை தடுக்க முடியாமல் போயிருக்கின்றது.

அத்துடன் குண்டுத்தாக்குதலில் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை  கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொண்டார். அதனால் தான் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என அவர் தொடர்ந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் காெடுத்து வருகின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44