கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்தை இன்று 

Published By: MD.Lucias

15 Dec, 2015 | 09:49 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­களது சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பான கூட்டு ஒப்­பந்­தத்தை மேலும் கால­தா­ம­தத்­திற்குள் ஆக்­கி­வி­டக்­கூ­டாது. ஆகவே நாளை காலை 11.30 மணி­ய­ளவில் (இன்று செவ்­வாய்க்­கி­ழமை) சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுத்­துள்ளேன். இதன்­போது இடம்­பெ­று­கின்ற பேச்­சு­வார்த்­தையை இறு­தி­யாக்கி கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந் நாட்டில் இரண்டு இலட்­சத்­துக்கும் அதி­க­மான உழைக்கும் அப்­பாவி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கக் கூடிய அதி­க­ரித்த சம்­ப­ளத்தை இல்­லாது செய்­வ­தற்கு இட­ம­ளிக்­காது இரு தரப்­பி­னரும் கைச்­சாத்­தி­டுவர் என எதிர்­பார்க்­கிறேன் என்று தொழில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன நேற்று சபை­யில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை தில­கராஜ் எம்.பி.யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இரண்டு இலட்­சத்­துக்கும் அதி­க­மான தோட்டத் தொழி­லா­ளர்கள் எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பாரிய பங்­க­ளிப்­பினை பெற்றுக் கொடுத்து வரு­கின்­றனர் என்­ப­தனை எவரும் மறுப்­ப­தற்­கில்லை. இவர்­க­ளது சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை வலி­யு­றுத்தி தில­கராஜ் எம்.பி.யினால் கொண்டு வரப்­பட்ட சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யா­னது காலத்தின் தேவை­யா­கும்.

இவர்­க­ளது சம்­பள நிர்­ண­ய­மா­னது கூட்டு ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் இடை­யி­லேயே இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதனை மேற்­கொள்­ளும்­போது அவர்கள் நிபந்­த­னை­களை உள்­வாங்கிக் கொள்ள முடியும். இத­னூ­டா­கவே தொழி­லா­ளி­களின் இரண்டு வரு­டங்­க­ளுக்­கான சம்­பளம் உள்­ளிட்ட ஏனைய விட­யங்­களும் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யத்தில் ஒரு­போதும் அர­சாங்கம் தலை­யிட்­டி­ருக்­க­வில்லை. இவ் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதன் பின்னர் அதில் குறை­பா­டுகள் இல்­லா­தி­ருப்பின் தொழில் ஆணை­யாளர் கைச்­சாத்­திட்டு உறு­திப்­ப­டுத்­து­வதை மட்­டுமே மேற்­கொள்வார்.

மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்ள இவ் ஒப்­பந்த செயல்­மு­றை­யா­னது மீண்டும் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு இரு தரப்­புக்­களும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­போதும் அது முடி­வுக்கு வர­வில்லை. இது தொடர்ந்தும் கால­தா­ம­த­மா­கி­யதால் முன்னர் இருந்த தொழில் அமைச்­சர்கள் பேச்­சுக்­களை நடத்­தினர். தற்­போது நான் அமைச்சுப் பதவி ஏற்ற ­பின்னர் செப்­டெம்பர் மாதம் 30 ஆம் திகதி இரு தரப்­பி­ன­ரையும் அழைத்து நான்கு மணி­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இதன்­போது சில தொழிற்­சங்­கங்கள் நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மில்­லாத சில யோச­னை­களை முன்­வைத்­தன.

எனினும் இன்­றைய பெருந்­தோட்ட உற்­பத்­தி­க­ளான தேயிலை மற்றும் இறப்பர் ஆகி­ய­வற்றின் விலைகள் உள்ளூர் சந்­தை­யிலும் சர்­வ­தேச சந்­தை­யிலும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன. சில இறப்பர் தொழிற்­சா­லைகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நடை­முறை சிக்­கலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள முடி­யாத சிலர் 1000 ரூபா சம்­ப­ளத்தை கோரி நின்­றனர். இதன் கார­ணத்­தி­னா­லேயே தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு விவ­காரம் கடந்த எட்டு மாதங்­க­ளாக கால­தா­ம­த­மா­கின.

நியா­ய­மான சம்­பளத் தொகையை பெற்றுக் கொடுக்கும் இடத்­துக்கு நாம் வர வேண்டும். அதுவே நிய­தி­யு­மாகும். இதனைப் பேச்­சு­வார்த்­தை­யி­னூ­டா­கவே மேற்­கொள்ள வேண்டும். எனினும் அவ்­வா­றான நிலைமை உரு­வாகி வர­வில்லை. எனினும் இதனை மேலும் கால­தா­ம­தத்­திற்குள் ஆக்­கி­வி­டக்­கூ­டாது என்ற கார­ணத்­தினால் நாளை காலை 11.30 மணி­ய­ளவில் (இன்று செவ்­வாய்க்­கி­ழமை) சம்­பந்­தப்­பட்டத் தரப்­பி­ன­ருக்கு அழைப்பு விடுத்­துள்ளேன். இதன்­போது இடம்­பெ­று­கின்ற பேச்­சு­வார்த்­தையை இறு­தி­யாக்கி கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அவர்­கள்தான் இவ் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­ப­வர்கள். ஆகவே இந் நாட்டில் இரண்டு இலட்­சத்­துக்கும் அதி­க­மான உழைக்கும் அப்­பாவி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்கக் கூடிய அதி­க­ரித்த சம்­ப­ளத்தை இல்­லாது செய்­வ­தற்கு இட­ம­ளிக்­காது இரு தரப்­பி­னரும் கைச்­சாத்­தி­டுவர் என எதிர்­பார்க்­கிறேன். ஏனெனில் இது தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தமாகவும் இருந்து வருகின்றது.

அனைத்து பகுதிகளிலும் இருந்து

கிடைக்கும் தகவல்களின் அடிப்

படையில் தோட்டத் தொழிலாளர் கள் இவ்விடயத்தில் ஒரு வித கலக்க நிலையில் இருப்பது தெரிகிறது. மேலும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். பல தட

வைகள் என்னுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசியுள்

ளார். தொழில் அமைச்சர் என்ற வகையில் நானும் எனது அர்ப் பணிப்பை வெளிக்காட்ட விழை கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22