கள­னி­வெளி ரயில் பாதையில் அவி சாவளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி பாட­சாலை மாண­வர்­களை ஏற்­றிக்­கொண்டு செல்லும் ரயில் மீது கல்­லெ­றிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் மூன்று பேரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

இது தொடர்­பாக நார­ஹேன்­பிட்டி பொலி ஸார் தெரி­விக்­கையில்,

அவிசா­வளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி நேற்று புறப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த பாட­சாலை சேவை ரயில் மீது நார­ஹேன்­பிட்­டி­யில் வைத்து இளை­ஞர்கள் 3 பேர் கல்­லெ­றிந்­துள்­ளனர். 16,17 மற்றும் 18 வய­து­டைய இளை­ஞர்­களே இவ்­வாறு கல்­லெ­றிந்­த­தாக சந்­தே­கத்­தின்­பேரில் நார­ஹேன்­பிட்டி பொலிஸாரால் கைது­செய்­யப்பட்டுள்­ளனர்.

சந்­தேக நபர்கள் நார­ஹேன்­பிட்டி பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

இவர்­களின் கல்­லெறி தாக்­கு­தலில் ரயிலின் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­துடன் விளை­யாட்­டுத்­த­ன­மா­கவே கல்­லெ­றிந்­த­தா­கவும் பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்ப கட்ட விசா­ர­ணை­யின்­போது இவர்கள் தெரி வித்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.