ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றது - அஜித் மான்னப்பெரும

Published By: Digital Desk 3

09 Apr, 2021 | 04:33 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. ஆனால் இரண்டு வருடங்களாகியும்  தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியாமல் பாேயிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற இரண்டு வருடங்கள் ஆகின்றபோதும் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கின்றது. ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்களே தவிர தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறி இருக்கின்றது.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் தேசிய வளங்களை பாதுகாப்பதாகவும் தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நாட்டின் தேசிய வளங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு அரச அதிகாரிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுக்கும் அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடனே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்த எதனையும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் மக்கள் இன்று தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிந்திப்பதில்லை. மாறாக உயிர்வாழ்வதற்கு தேவையான சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்றே சிந்திக்கின்றனர். பாரியளவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது. பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றது.மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை.

அதேபோன்று மக்களுக்கு இன்று சந்தைக்கு சென்று நம்பிக்கையுடன்  எந்த உணவுப்பொருளையும் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் இந்த புத்தாண்டு காலத்தில் மக்கள் சந்தைகளில் நம்பிக்கையுடன் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் சூழலை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44