அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக பண மோசடி: இருவர் கைது

Published By: Digital Desk 3

09 Apr, 2021 | 02:02 PM
image

(செ.தேன்மொழி)

பண்டாரகம - பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுதருவாதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட பகுதியில் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு பண மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை பண்டாரகம பகுதியில் நேர்முகப்பரிச்சையொன்றை நடத்தியுள்ளதுடன் இதன்போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

தெஹிவலை மற்றும் பட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 96 வெளிநாட்டு பயண பற்றுச்சீட்டுகளும் , ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 390 ரூபாய் பணமும் மீட்க்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து இதற்கு முன்னரும் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இந்நிலையில் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27