மன்னிக்க விரும்பும் புஷ்பிகா - மன்னிப்புக் கேட்க மறுக்கும் கரோலின் ஜூரி  : சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால் விடயம் நீதிமன்றுக்கு 

09 Apr, 2021 | 07:16 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உலகின் திருமணமான  அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் மொடல் அழகி சூலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.  

2020  ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும்  போட்டியில் வெற்றிபெற்று முடிசூடிய போது, தற்போதைய உலக திருமணமான அழகு ராணியான கரோலின் ஜூரி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்ததாக கூறி, இலங்கையின் திருமணமான அழகு ராணியாக தெரிவான புஸ்பிகா டி சில்வா  கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில்  செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை  இடம்பெற்றது.  

 குற்றவியல்  நடவடிக்கையாக கருத முடியுமான பலவந்தப்படுத்துதல், பயமுறுத்துதல் மற்றும்  சிறு காயம் ஏற்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும், பிணையம் ஒன்றில் கையெழுத்திட்ட பின்னர், எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதன்படி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆஜராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகு ராணிக்கான  போட்டியில் தான் வெற்றிபெற்று முடிசூடிய போது, தற்போதைய உலக திருமணமான அழகு ராணி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்ததாக கூறி  புஸ்பிகா டி சில்வா கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடந்த  5 ஆம் திகதி அதிகாலை 2  இரண்டு மணியளவில் முறைப்பாடு செய்திருந்தார்.

திருமணமான அழகியாக தாம் தெரிவாகி மகுடம் சூட்டப்பட்ட போது, அதனை பறித்தெடுத்து மற்றுமொருவருக்கு சூட்டியதாக முறைப்பாட்டில் அவர்  சுட்டிக்காட்டியிருந்ததுடன் தனக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில்  அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அனைவர் முன்னிலையிலும் பலாத்காரமான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் புஷ்பிகா டி சில்வா தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் குறித்த முறைப்பாடு மீதான விசாரணைகள் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. 

அதன்படி, முறைப்பாட்டாளர், உலகின் திருமணமான அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் மொடல் அழகி சூலா பத்மேந்திரா, இலங்கையின் திருமணமான அழகிப் போட்டி ஏற்பாட்டாளர் பிரபல அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர். 

அதன்போது அனைத்து தரப்பினரும்  பொலிஸ் நிலையத்துக்கு தமது சட்டத்தரணிகளுடன் பிரசன்னமான நிலையில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றன.

 இந்த விசாரணைகளின் போது, குறித்த விவகாரத்தை சமாதானமாக முடித்து வைக்க பொலிஸார் பாரிய பிரயத்தனங்களை முன்னெடுத்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்த்து வைக்க பொலிஸார் முயற்சித்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதன்போது, பிரசித்தமான ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, தன்னிடம் உலகின் திருமணமான அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி  உள்ளிட்டோர் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என முறைப்பாட்டாளரான   2020 ஆம் ஆண்டின் இலங்கையின் திருமணமான அழகியான புஷ்பிகா டி சில்வா நிபந்தனை முன் வைத்துள்ளார். 

பிரசித்தமாக தனக்கு நடந்த குறித்த  சம்பவம் தொடர்பில் பிரசித்தமாக தன்னிடம் மன்னிப்பு கேட்டால்   விடயத்தை சமாதானமாக முடித்துக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

 எனினும் அதற்கு உலகின் திருமணமான அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி  ஒத்திசையவில்லை.  

தனிப்பட்ட கடிதம் ஊடாக, வீட்டிலிருந்து வீடியோ தொழில் நுட்பம் ஊடாக அல்லது பெயர் எதனையும் குறிப்பிடாமல் மன்னிப்பு கேட்பதாக உலகின் திருமணமான அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி  தெரிவித்துள்ளார். இதனால்  சமாதானமாக முடித்துக்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்ததாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

இவ்வாறான நிலையிலேயே,  முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கருவாத்தோட்டம் பொலிஸார்,   உலகின் திருமணமான  அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகியோரை கைது செய்தனர். 

சுமுகமாக குறித்த விடயத்தை தீர்க்க முடியாமல் போனதால், இந்த சம்பவத்தை நீதிமன்றுக்கு பாரப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 அதன்படியே சந்தேக நபர்களான இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாரு பொலிஸார் அறிவித்து அவர்களை  பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11