கொக்கிளாய், நாயாறு கிராமங்களில் சிங்கள மக்கள் பரம்பரையாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பௌத்த விகாரை தேவையென்றால் கட்டிக் கொடுக்கத் தயாராகவுள்ளோம். அம் மக்கள் தொடர்பில் எவரும் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன,

வடக்கில் கண்ட கண்ட இடங்களில் அரச மரம் வைத்தும் புத்தர் சிலை அமைத்தமையும் “தவறான” செயல் என்றும் அமைச்சர் குறை கூறினார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.