உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக் கூறவேண்டும் - ருவன் விஜேவர்தன

Published By: Digital Desk 3

08 Apr, 2021 | 12:55 PM
image

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூறவேண்டியவர். இந்த தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் அதனை நாட்டின் தலைவர் அறியாதிருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே அவரே பொறுப்புக் கூற வேண்டியவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அடிப்படைவாத கருத்துகளை பரப்பி வரும் அமைப்புகளை தடைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரிதாரிகளாக நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகியோரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்துபார்க்க வேண்டும். பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகிய இருவருக்கும் இடையில் தலைமைத்துவம் தொடர்பில் குழப்பநிலைமை ஏற்பட்டிருந்தது. அதனால் அதிலொரு சிக்கல் தன்மைவுள்ளது. இந்நிலையில் மௌலவி பிரதான சூஸ்திரதாரி என்றால் அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக இல்லாவிட்டாலும் அவரே பொறுப்புக் கூறவேண்டியவர். நாட்டில் தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக அரச புலனாய்வு துறையினர் அறிந்துக் கொண்டிருந்தால் , அதனை நாட்டின் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இதேவேளை , நாட்டின் ஜனாதிபதிஇன்னுமொரு நாட்டுக்கு செல்வதாக தீர்மானித்தால் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இன்னுமொருவருக்கு ஒப்படைத்துச் செல்ல வேண்டும்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சராகவும் முன்னாள் ஜனாதிபதியே செயற்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டாவது இது தொடர்பில் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு அந்த பொறுப்புகளை கையளிப்பதில் அவருக்கும் திருப்தி இல்லை என்றால் , இந்த பொறுப்புகளை தனக்கு நப்பிக்கையான ஒருவருக்கு ஒப்படைத்திருக்க முடியும். ஆனால் இது எதனையும் முன்னாள் ஜனாதிபதி செய்யவில்லை.

இதேவேளை அடிப்படைவாத கருத்துகளை பரப்பிவரும் அமைப்புகளை தடைச்செய்வது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம். அடிப்படைவாத கருத்துகள் காரணமாக நாட்டில் குழப்பநிலைமை ஏற்படுகின்றது என்றால் அவற்றை தடைச் செய்வதே சிறந்தது. பொதுபலசேனா அமைப்பின் சில கருத்துக்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பொதுபலசேனா முற்று முழுதான அடிப்படைவாத அமைப்பென கூற இயலாது எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04