இலங்கை ஜனாதிபதியை போன்று நேர்மையான அரசியல் தலைமைகள் அவசியம் : யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் 

Published By: Robert

17 Aug, 2016 | 03:53 PM
image

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்குமான உடன்படிக்கைகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதியை போன்று நேர்மையான அரசியல் தலைமைகள் அவசியமாகும் என யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஐரினா பொகோவா தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை  சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக தாம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்ததாகக் குறிப்பிட்ட ஐரினா, இயற்கை எழில்மிகுந்த இலங்கை நாட்டின் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக யுனெஸ்கோ நிறுவனத்தினால் நிதி உதவி வழங்குவதற்குக் கிடைத்திருப்பதையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.   

மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நாட்டின் கலாசார மற்றும் கல்வி ரீதியான நடவடிக்கைகளுக்கு யுனெஸ்கோ நிறுவனம் மிக நீண்டகாலமாக வழங்கிவரும் உதவிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் இந்த உதவிகள் தொடரவேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். 

பெரிஸ் நகரத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஐரினா அம்மையாருடன் மேற்கொண்ட கலந்துரையாடலை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சூழலைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்பாடுகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பிரான்ஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் திலக் ரனவிராஜா, யுனெஸ்கோ நிறுவனத்தின் புதுடில்லிப் பணிப்பாளர் சிகோறு ஒயாகீ இலங்கை நாட்டின் யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16