சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை இறுதித் தீர்மானமின்றி நிறைவு  - ஜி.எல் பீரிஸ்

Published By: Digital Desk 4

07 Apr, 2021 | 09:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை பலவீனப்படுத்த  எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுதந்திர  கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி தீர்மானமின்றி நிறைவுப் பெற்றுள்ளது.

கூட்டணியியுடன் ஒன்றிணைந்து போட்டியிட முயற்சிக்கிறோம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்  தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்க நடவடிக்கை - ஜீ.எல். பீரிஸ் |  Virakesari.lk

மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் நிகழ்வில் கலந்துக் கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம்  நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.  தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் பல சவால்களுக்கு மத்தியில்  நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அரசாங்கத்தை பலவீனப்படுத்த  எதிர்க்கட்சியினர்  போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த  முயற்சிக்கிறார்கள்.

ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும்  எதிர்க்கட்சியினருக்கு ஏற்றாட்போல் செயற்படுகிறார்கள். ஒரு தரப்பினரது நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு  மக்களாணைக்கு முரணானது என்பதை  அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம்  உறுதியாக உள்ளது. பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து கட்சி தலைவர்கள் உறுதியான தீர்மானத்தை விரைவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  மாகாண சபை தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை.ஆனால் தனித்து செல்லும் நிலைப்பாட்டில் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் குறித்து கடந்த வாரம் சுதந்திர கட்சியினருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம் பெற்றது. எவ்வித தீர்மானமும் இல்லாத வகையில்  பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி ஊடாக அனைத்து தரப்பினiரையும் ஒன்றினைத்து  மாகாண சபை தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை நபாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15