சீனா, ரஷ்யாவை இலக்கு வைக்கும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கை

Published By: Digital Desk 2

07 Apr, 2021 | 04:24 PM
image

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மோசமடைந்துள்ள நாடுகள் மற்றும் சம்பவங்களை அமெரிக்கா அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மிக முக்கியமாக, உய்குர்கள் மீதான சீனாவின் அடக்குமுறை, எதிர்ப்பு அரசியல் தரப்பினரை ரஷ்யா குறிவைத்ததுச் செயற்படுதல் போன்றன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையானது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 200 நாடுகளில் காணப்படும் மனித உரிமை நிலைமை குறித்த தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.அந்த அறிக்கையில் ஆண்டு தோறும் ரஷ்யா, சீனா சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணான வகையில் முன்னெடுக்கும் விடயங்கள் தொடர்பில் குறிப்பிடுவது வழக்கமாகும். 

இந்நிலையில் குறித்த அறிக்கையின் அறிமுக நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், “அன்டனி பிளிங்கன் குறிப்பிடுகையில்,

“2020 ஆம் ஆண்டில் உலகளவில் காணப்பட்ட மனித உரிமை விடயங்களை கவனத்தில்  கொள்கின்றபோது மிலேச்சத்தனமான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட சூழலில் ஏராளமான மக்கள் காணப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை பயன்படுத்தி மனிதர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கும் சர்வாதிகார ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கும் பயன்படுத்தியுள்ளன” என்று அவர் பகிரங்கமாக குறிப்பிட்டார். 

சீனாவின், வுஹானில் கொரோனா தொற்று முதலில் கண்டறிப்பட்டது. அது தொடர்பில் அறிக்கையிட்ட நான்கு ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பரவலைக் கட்டப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளிலிருந்து சீனாவின் கல்வியாளர்கள், உத்தியோக பூர்வமாக விலகியுள்ளனர். இதற்கு துன்புறுத்தல்களும், வலிமையான தணிக்கை உத்தரவுகளுமே காரணமாகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஆய்வுகளைச் செய்யும் பல்கலைக்கழகங்கள் கூட காவல் துறையினரின் தலையீடுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, சீன அரசாங்கம், ஜிங் ஜியாங் மாகாணத்தில் வெகுஜன தடுப்பு திட்டத்தை விவரிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளமை வெளிப்படையான விடயமாகும். 

அத்துடன் சீனாவின் மற்றொரு மாகாணமான ஜிங் ஜியாங்கில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துவருவமாக எனக்கு முன்னர் பதவியில் இருந்த மைக் பொம்பியோ குறிப்பிட்டார். அந்தக் கூற்றுடன் நான் இணங்கிச் செல்வதோடு அதே விடயங்களை மீளவும் நினைவு படுத்துகின்றேன் என்றும் பிளிங்கன் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் இன முஸ்லிம்களுக்கு மேலதிகமாக பிற முஸ்லிம் இன சிறுபான்மை குழுக்களும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சீனா கூறிவரும் வகையில் பகல்வேளைகளில் மேற்படி இனத்தினைச் சேர்ந்த இரண்டு மில்லியன் வரையிலானவர்கள் கல்வி மற்றும் பயிற்சியின் பெயரில் நடைபெறும் விடயங்களில் பங்கேற்பதாகவும் இந்த விடயம் கடந்த ஆண்டில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேநேரம், குறித்த அமெரிக்காவின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையானது, ரஷ்யாவின் எதிர்க்கட்சித்தலைவரும் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி முகங்கொடுத்துள்ள விடயங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது.

குறிப்பாக அவர் விமானப்பயணத்தில் இருந்தபோது ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே அவருக்கு விஷம் வழங்கியதாகவும் பின்னர் அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு நாடு திரும்பியபோது பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் நம்பகரமான ‘அறிக்கை ஆதரங்களின்’ அடிப்படையிலேயே இவ்வியடம் சுட்டிக்காட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைவிடவும், எத்தியோப்பியாவில், குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைச் செய்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப்படுவதில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயப்படுத்தப்பட்டே ரிக்ரே பிராந்தியத்திற்கு அனுப்பபட்டுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கணிப்பதும்,தீர்மானிப்பதுவும் கடினமாக உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதேநேரம், ரிக்ரே பிராந்தியத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலைகளையும், கரிசனைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரிக்ரே பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் “இன அழிப்பு” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனின் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவருடைய குற்றச்சாட்டை எத்தியோப்பியா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04